அவர் குளிக்காதவர் விவாகரத்து கொடுங்கள்...


An image explaining an Indian marriage style

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 23 வயது பெண்மணி தனது கணவர் குளிக்காமல் இருப்பதால் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் விவாகரத்து கோரி இருக்கிறார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு தனது கணவர் தொடர்ந்து ஏழு நாட்கள் ஆகியும் குளிக்காமல் இருப்பது, துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக வாசனை திரவியத்தை பயன்படுத்தி வந்ததை பார்த்து மனைவியை கண்டித்துள்ளார்.

மேலும் தாடியையும் சுத்தம் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் இப்படி  ஒரு கணவரோடு வாழ இயலாது என மனைவி கடந்த ஆண்டு விவாகரத்து கோரினார்.

இந்நிலையில் ஆறு மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழவும், இருவருக்கும் ஆற்றுப்படுத்தல் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள வேண்டாம் என மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக் கொண்டும் தனக்கு விவாகரத்து வேண்டும் என பெண் உறுதியாக இருக்கிறார்.

Add new comment

8 + 5 =