அருளாளர் Ortiz, எளிமையான புனித வாழ்வுக்கு எடுத்துக்காட்டு


அருளாளர் Maria Guadalupe Ortiz. PC: Vatican News

இச்சனிக்கிழமை மே 18, காலையில், இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகர், Vistalegre அரண்மனை ஆலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இறைஊழியர் Maria Guadalupe Ortiz de Landazuri அவர்களை, அருளாளர் என அறிவித்தார், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, இத்திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால் பெச்சு அவர்கள், செபம் மற்றும் செயலையும், தியானம் மற்றும் பணியையும் ஒன்றிணைந்து ஆற்ற இயலும் என்று, இன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள Maria Guadalupe Ortiz அவர்கள், நம் எல்லாருக்கும் எடுத்துரைக்கிறார் என்று, மறையுரையாற்றினார்.

மாணவிகளை உருவாக்குதல் மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அருளாளர் Maria Guadalupe Ortiz அவர்கள் எல்லாச் சூழல்களிலும், மற்றவருக்கு ஒரு கொடையாக நாம் வாழ இயலும் என்பதை, தன் வாழ்வில் வெளிப்படுத்தினார் என்று கூறினார், கர்தினால் பெச்சு.

வேதியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய, பொதுநிலை விசுவாசி அருளாளர் Maria Guadalupe Ortiz அவர்கள், 1944 ஆம் ஆண்டில் புனித Josemaría Escrivà அவர்களைச் சந்தித்தபின், விசுவாசத்தில் ஆழமாக வேரூன்றப்பட்டு, மெக்சிகோ நாட்டிற்கு மறைப்பணியாற்றச் சென்றார். 1916 ஆம் ஆண்டு மத்ரிதில் பிறந்த இவர், 1975 ஆம் ஆண்டில் Pamplonaவில் இறைபதம் சேர்ந்தார். 

(வத்திக்கான் செய்தி - மே 19, 2019)

Add new comment

7 + 1 =