அமேசான் பகுதி குறித்த ஆயர்கள் மாமன்ற வரைவு தொகுப்பு


வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து அமேசான் பகுதி பூர்வீக இனத்தவர் (ANSA)

வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, வத்திக்கானில் நடைபெறவிருக்கும், அமேசான் பகுதி குறித்த சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் கலந்துரையாடல்களுக்கென,  “Instrumentum Laboris” என்ற வரைவு தொகுப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரத்தில் (மே,14-15) வத்திக்கானில் நடைபெற்ற, இந்த சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது தயாரிப்பு கூட்டத்தில், இந்த வரைவு தொகுப்புக்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதன் முதல் தயாரிப்பு கூட்டம், 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்றது.

“அமேசான்: திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலுக்கும் புதிய பாதை” என்ற தலைப்பில், அமேசான் பகுதி குறித்த சிறப்பு ஆயர்கள் மாமன்றம் நடைபெறும். இந்த ஆயர்கள் மாமன்றம் நடைபெறுவது குறித்து, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி திருத்தந்தை அறிவித்தார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்புவியைப் பாதுகாப்பது குறித்து, 2015 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Laudato Si திருமடலின் பின்னணியில், இந்த மாமன்றத்தை திருத்தந்தை அறிவித்துள்ளார். 

(வத்திக்கான் செய்தி - மே 19, 2019)

 

Add new comment

12 + 8 =