சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 19 | Rev. Fr. Mariyan #EMM2019 | Ep-19

இன்றைய நற்செய்தியில் எத்தகைய சூழ்நிலைகளிலெ;லாம் இயேசுவுக்கு அவருடைய சீடர்கள் சான்றுபகர்வார்கள் என்பதனை எடுத்துரைக்கிறார். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும், பொது இடங்களிலும் தங்களுடைய நம்பிக்கைக்குச் சான்று பகர்வார்கள். திருத்தூதர் பணிகள் நூலில் பார்க்கிறோம். பவுல் தொழுகைக்கூடத்திலும் (திப 13:4-17), உரோமை அதிகாரிகள் முன்னும் (திப 21:33-22,29) இயேசுவுக்குச் சான்றுபகர்வதைப் பார்க்கிறோம். இயேசு அவர்களுடைய சாட்சியம் விண்ணகத்தை வந்தடையும் என உறுதியளிக்கிறார். அவர்கள் அதிகாரிகள் முன்னும் தொழுகைக்கூடங்களிலும் இயேசுவிற்கு சான்றுபகர்கின்றபோது, இயேசு விண்ணுலகில் தந்தையாகிய இறைவன் முன்னிலையில் அவர்களை அங்கிகரிப்பார் என உறுதியளிக்கிறார். 

இதற்கு முந்திய பகுதியில் இயேசு தம் சீடர்களை உற்சாகமும் நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதே வேளையில் அவர் தனது சீடர்களுக்கு அவர்களின் பணியில் துன்பத்திலும், கொடூரமான செயல்களிலிருந்து அமைதி அளிப்பதாக வாக்களிக்கவில்லை. மாறாக அவர்கள் பயத்திலிருந்து விடுதலை அடைந்து, இயேசுவைப் போல சாவை வென்று உயிர்ப்பில் மகிழ முனையவேண்டும் என அறிவுறுத்துகிறார். 

சீடர்கள் இவ்வுலகில் இயேசுவை தங்கள் மீட்பராக ஏற்று அறிவிக்கின்றபோது, பொது தீர்ப்பின்போது கடவுள் முன்னிலையில் இயேசு அவர்கள் பக்கம் சாய்ந்துகொள்வார். அதிகாரம் பெற்றவர்கள், ஆட்சியாளர்களிடமிருந்து சீடர்களுக்கு எதிர்ப்பு கிளம்பும்போது, திருஅவையில் உயிர்த்த இறைவன் தன்னுடைய ஆவியால் முழுவதும் பிரச்சன்னமாயிருக்கிறார். 

தூய ஆவியானரை பழித்துரைப்பவருக்கு மன்னிக்கபடமாட்டார் என இயேசு கூறுகின்றார். இது லூக்காவின் நற்செய்தி அறிவிப்பு தளத்திலிருந்து நாம் சிந்திக்கவேண்டும். இயேசுவின் சீடர்கள் அவரை மறுதலிப்பார்கள் என்பது பேதுரு வழியாக இயேசு கைது செய்யப்பட்டபோது நிகழ்ந்தது. ஆனால் அப்பொழுது பேதுரு இயேசு பாடுகள், இறப்பு, உயிர்ப்பினை அனுபவிக்கவில்லை, மேலும் பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உயிர்த்த இறைவன் உங்களுக்கு அமைதி உண்டாகுக என வாழ்த்திப் பேதுருவை மன்னித்தபோது, உயிர்த்த இறைவனின் வல்லமையால் பேதுரு நிரப்பப்பட்டார். 

அதன்பின்பு மிகவும் தைரியமாக உயிர்த்த இறைவனைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார் என திருதூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். ஆனால் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் வெளியிலிருந்து வரும் பயமுறுத்தல், துன்பங்கள் மத்தியில் தங்கள் நம்பிக்கையை மறுதலித்துவிடக்கூடாது என்பதற்காகவும், அவர்கள் அதன் வழியாக விழிப்புணர்வு பெற்று சக்திபெறவும் லூக்கா இயேசுவின் வார்த்தையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். 

கடவுளின் மகனுக்கு எதிராக பேசியவர்கள் மன்னிக்கப்படுவார்கள் ஆனால் தூய ஆவியானவரைப் பழித்துரைப்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்கிறார். அப்படியென்றால், கடவுளின் மகனை இவ்வுலகில் பழித்துரைப்பவர்களுக்கு மீண்டு வாய்;ப்பானது தூய ஆவியானவரின் வழியாக பெந்தகோஸ்தே நாளில் கொடுக்கப்படும். அதன் வழியாக அவர் மனம்மாறி மன்னிப்புப் பெறலாம். இது பவுலின் வாழ்விலும் யூத மறையிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் வாழ்வில் பார்க்கலாம். அப்படியானால் மனமாறுதலுக்கும், மன்னிப்புக்கும், புதிய வாழ்வுக்கும் ஆதாரமாக இருக்கும் தூய ஆவியானவருக்கு எதிராக பழித்துரைப்பவர்கள் எப்படி மன்னிப்புப் பெறுவார்கள் எனக் கூறுகிறார். இதை சீடர்களின் நற்செய்தியை நிராகரித்தவர்களின் கண்மூடித்தனத்தையும், கடினஉள்ளத்தையும் இதை உறுதிசெய்கிறார். 

எனவே நம்முடைய இதயத்தை கடவுளிடம் கடவுளைநோக்கி கடவுளினுள் திருப்புவோம். நம் இதயத்தை அறிந்து, நம் பாவங்களிலிருந்து நமக்கு மன்னிப்பு அளித்து மீட்பினைக் கொடுப்பவர் அவரே. உரோ 4:13, 16-18, லூக் 12:8-12.

Add new comment

4 + 0 =