சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 16

இன்றைய முதல் வாசகத்தில் உரோமையிலுள்ள நம்பிக்கையாளர்களிடம் பேசுகிறார். அவர்கள் புற இனத்துமக்களைப்போல பாவத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும், புறஇனத்துமக்களை தீர்ப்பிடுகிறார்கள். தாங்கள் திருச்சட்டத்தை கடைபிடிப்பதால் அவர்களின் தவறான செயல்கள் மறைந்துவிடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். நாம் தீர்ப்பிடப்படுவது நம்முடைய சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதால் அல்ல மாறாக கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையாலேயே என்கிறார். எனவே வாயினால் நம்பிக்கை அறிக்கையிடுவதில் அல்ல, நமக்காக இறந்து உயிர்த்த இயேசுவில் கொண்ட நம்பிக்கையினால் விளையும் அன்பின் செயல்பாடுகளினால் நாம் தீர்ப்பிடப்படுகிறோம். எனவே இத்தகைய நம்பிக்கை என்பது இயேசுவின் தெய்வீக அன்பிலும், இயல்பிலும் முழுமையாக பங்குகொள்வதாகும்.

மீட்பு என்பது யாருக்கும் கொடுக்கப்பட்ட குறிப்பாக கொடுக்கப்பட்டவை அல்ல, மாறாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. கடவுள் ஒருவரே தீர்ப்பிடுபவர். எனவே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, கடவுளில் முழுமையாக நம்மை சரணாகதி ஆக்குவது நம்முடைய முடிவுக்கு விடப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களின் சட்டவல்லுனர்களையும் சாடுகிறார். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவில் நிறைவுசெய்யப்படும் மீட்பின் செயல்களை அறிந்துகொள்ளாமல், சட்டங்களை சம்பிரதாயங்களையும் வெளிப்புறத்தில் கடைபிடிப்பதால் மீட்பு அவர்களுக்கு வந்துவிடும் என நினைத்து செயல்படுகிறார்கள். அதே வேளையில் இயேசு சட்டங்களையும் சடங்குகளையும் அவர் அழித்துவிடவில்லை, மாறாக அவை சரியான சூழ்நிலையில் சரியான முறையில் செயல்படுத்தப்படவேண்டும். அதாவது கடவுளின் மீது நம்பிக்கை அதிகரிக்கவும், நம் சகோதர சகோதரிகளின் உறுதிப்பட உதவுவதாக அமையவேண்டும்.

மேலும் அவர்கள் எல்லா இடங்களிலும் முதன்மையான இடத்தைத் தேடுவதும், பிறர் மீதும் அதிகமான சுமையை, அதாவது அவர்கள் கடைபிடிக்காததை கடைபிடிக்கும்படி வற்புறுத்துவதையும் சாடுகிறார். நம்பிக்கை ஒருபோதும் ஒரு மனிதனை தரம் தாழ்த்தாது, மாறாக அவர் கடவுளிடம் நெருங்கிச் செல்வதற்கு உற்சாகப்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஆக நற்செய்தி அறிவிப்பு பணிசெய்யும் சீடர்கள் தங்கள் வாழ்வில் வெளிப்புற உதவிகள் செய்வதோடு நின்றுவிடாமல், தங்கள் வாழ்வில் வழியாக இரக்கத்தைக் கடைபிடிப்பதிலும், பிறன்பில் வாழ்வதிலும் தாங்கள் தூய்மையான வாழ்வையும் இதயத்தையும் பிறருக்கு காட்டவேண்டும். எல்லாரும் இறைவனின் மீட்பில் பங்குகொள்வதற்காக சீடர்கள் தங்களையே முழுவதும் இயேசுவிற்குக் கொடுக்கவேண்டும். 

உரோமையர் 2:1-11, திருப்பாடல் 62:2-3,6-7,9, லூக்கா 11:42-46
 

Add new comment

2 + 9 =