மீண்டும் திருத்தந்தை நினைவுகூறிய அந்த 3 வார்த்தைகள் என்ன?


பானமா திருப்பயணிகள் (ANSA)

பானமா நாட்டிலிருந்து, வத்திக்கானுக்கு வருகை தந்த திருப்பயணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 13, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்திய வேளையில், அவர்கள் பல்வேறு வழிகளில் தனக்கு நன்றி கூறியதைக் குறிப்பிட்டு, தானும் அவர்களுக்கு நன்றியறிந்திருப்பதாக கூறினார்.

நன்றியைப்பற்றி பேசும் அதே நேரத்தில், நன்றி என்ற சொல்லும், உணர்வும் நம்மிடையே அடிக்கடி மறக்கப்படும் ஒரு விசயமாக மாறி வருகிறது என்பதையும், நன்றி என்ற உணர்வே நம்மை மனிதர்கள் என்ற முறையில் மேன்மைப்படுத்துகிறது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நம் குடும்பங்களில் பயன்படுத்தப்படவேண்டிய மூன்று முக்கியமான பண்புகள், அனுமதி கேட்பது, மன்னிப்புக் கோருவது, நன்றி கூறுவது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவற்றில் ஒன்று குறைந்தாலும், அந்தக் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும் என்று கூறினார்.

Add new comment

13 + 4 =