தாய்லாந்து பணித் திட்டம்


Thailand

19 நவம்பர் 2019, செவ்வாய்கிழமை
19.00 - உரோமையிலிருந்து பாங்காகிற்குப் புறப்படுதல்.

20 நவம்பர் 2019, புதன்கிழமை
12.30 - பாங்காகிற்கு வந்துசேர்தல்.
•    இராணுவ விமான நுழைவாயில் 2-இல் அதிகாரப் பூர்வமான வரவேற்பு விழா.

21 நவம்பர் 2019, வியாழக்கிழமை, பாங்காக்
•    அரசு இல்ல வளாகத்தில் வரவேற்பு.
•    அரசு இல்லத்தின் உள் தந்த அறையில் பிரதம மந்திரியுடன் சந்திப்பு.
•    அரசு இல்லத்தின் சான்டி மைத்திரி அரங்கத்தில் அதிகாரிகள், அரசின் அமைப்பு மற்றும் தூதுப்படையுடன் சந்திப்பு.
•    வாட் ரட்சபோப்தி சதித் மகா சிமரம் கோவிலில் முதுபெரும் புத்த துறவியுடன் சந்திப்பு.
•    புனித லூயிஸ் மருத்துவமனை மருத்துவப் பணியாளர்களுடன் சந்திப்பு.
•    நோயாளிகள், முடியாதவர்களுடன் தனிப்பட்ட சந்திப்பு.
•    திருத்தந்தையின் அரசு திருத்தூதர் அலுவலகத்தில் மதிய உணவு.
•    அம்போன் அரச அரண்மனையில் மதிப்பிற்குரிய அரசர் மகா விஜிரலாங்கோன் “ராமா ஓ” அவர்களுடன் தனிப்பட்ட சந்திப்பு.
•    தேசிய அரங்கில் திருப்பலி

22 நவம்பர் 2019, வெள்ளிக்கிழமை, பாங்காக்

•    புனித பேதுரு ஆலயத்தில் குருக்கள், துறவியர், குருமாணவர்கள் மற்றும் வேதியர்களுடன் சந்திப்பு.
•    அருளாளர் நிக்கோலஸ் பூங்கார்டு கிட்பாம்ரங் திருத்தலத்தில் தாய்லாந்து ஆயர்கள் மற்றும் ஆசிய ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்புடன் சந்திப்பு.
•    விண்ணேற்பு அன்னைப் பேராலயத்தில் இளையோருடன் திருப்பலி.

23 நவம்பர் 2019, சனிக்கிழமை, பாங்காக்

இராணுவ விமான நுழைவாயில் 2-இல் அதிகாரப் பூர்வமான வழியனுப்பு விழா.
9.30 - டோக்கியோவிற்கு விமானப் பயணம்.

 

Add new comment

7 + 5 =