மகிழ்ச்சியின் இரகசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்


Pope Francis

பேங்ராக்கில் உள்ள 109 ஆண்டு பழமையான விண்ணேற்பு பேராலயத்தில் இளைஞர்களுக்காக திருப்பலி நிறைவேற்றியபோது திருத்தந்தை அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியின் இரகசியத்தை அறிந்துகொள்ளுங்கள் என்றார். துன்பங்கள் வருகின்ற நேரத்தில் இளைஞர்கள் உற்சாகப்படுத்தவேண்டும் என்பதற்காக, இருளிலும் அன்புத் தீயைப் பற்றி எரியச்செய்துகொண்டிருங்கள் என்று அவர்களை வேண்டிக்கொண்டார்.

இளைஞர்களே, நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையுடம் நோக்குங்கள் என வேண்டினார். கிறிஸ்துவில் வேரூன்றியிருங்கள். ஆண்டவர் நம்மை தேடிக்கண்டுள்ளார், நம்மை அளவிள்ளாமல் அன்பு செய்கிறார் என்பதை நினைவில் கொண்டு, எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் அனுகுங்கள். இயேசுவோடு நாம் உருவாக்கும் நட்பானது நம் வாழ்வுப் பாதைக்கு ஒளியேற்ற தேவையான எண்ணெய் போன்றது. அது நமக்கு மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ளவர்கள்: நம் நண்பர்கள், நம் அயலார், நம்முடைய வேலையில், பள்ளியில் உள்ள உடன்பணியாளர்கள், மேலும் நம்மைப் போல எந்தவிதத்திலும் யோசிக்காதவர்கள் ஆகிய அனைவரின் வாழ்வுப்பாதைக்கும் ஒளியேற்ற தேவையான எண்ணெய். 

விளக்குகளோடு மிகவும் ஆர்வமுடன் கிறிஸ்துவை எதிர்கொள்ள இருந்த பத்துப் பெண்கள் உவமையைக் குறிப்பிட்டுக்காட்டினார் திருத்தந்தை. அதில் சிலர் சோர்ந்துபோனார்கள், சிலர் தாமதமாக வந்தார்கள். இது எந்த கிறிஸ்தவர் வாழ்விலும் நிகழலாம் எனக் கூறினார்.

நம்முடைய அன்பு ஆண்டவரின் துன்பங்களைப்போல, பிரச்சனைகளையும் தடைகளையும் நாம் சந்திக்கின்றபோது அல்லது எந்த எதிர்நோக்கு இல்லாத சூழ்நிலையில் நாம் இயலாத தன்மையை உணரும்போது, அவநம்பிக்கையும், வெறுப்பும் நம்மை மேற்கொள்ளும், நம்முடைய கனவுகளில் அமைதியாக ஊடுருவும், நம்முடைய இதயத்தை ஒன்றுமில்லாத நிலைக்கு வளரச்செய்யும்.  

அப்படிப்பட்ட சூழ்நிலையில் விரக்தியடைந்த இளைஞர்கள் துன்பங்கள் அனுபவித்த தங்கள் ஆசிரியர்கள், தங்கள் குடும்பங்கள் மீதும் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆனால் மகிழ்ச்சியான இதயத்தின் இரகசியம் என்பது இயேசுவில் வேரூன்றி, ஆழப்பதிக்கும்போது நாம் காணும் பாதுகாப்பில்தான் இருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என திருத்தந்தை நம்மைப் பணிக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள், ஏனென்றால் அவர் எப்போதும் இருக்கிறார் என்று 83 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளைஞர்களைப் பலப்படுத்தினார். 

இந்த திருப்பலியில் ஏறக்குறைய 7000 கத்தோலிக்கப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டார்கள். திருத்தந்தை அவர்கள் தன்னுடைய வாகனத்தில் செல்கின்றபோது, நின்று குழந்தைகளை அரவணைத்தார், இளைஞர்களுடன் ஆரவாரித்தார். 

22 வயது சரிதா என்ற இளம்பெண், அவர் 35 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களை சந்தித்த ஆசிபெற்ற அவருடைய பாட்டியைப் பின்பற்றி வாழ்வதாகக் கூறினார். 

மேலும் சரிதா, நான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அவர் சாதராண சாமானினைப்போல இருக்கிறார். அவருடைய எளிமை எங்கள் அனைவருக்கும் ஒரு முழுமையான எடுத்துக்காட்டு. அவர் திருத்தந்தையானது முதல் திருஅவையின் கட்டமைப்பில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். அவர் ஒரு ஆடம்பரமான மாளிகையில் வாழவில்லை. சிறை கைதிகள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதவர்களின் பாதங்களைக் கழுவினார். அவருடைய திறந்த மனநிலை என்னுடைய இதயத்தை கவர்ந்திழுக்கிறது என்று கூறினார். 

நன்றி: பாங்காக் போஸ்ட்
 

Add new comment

5 + 3 =