அன்புள்ள இளையோரே, செபிக்க மற்றும் நடக்க

நீங்கள் இன்று விழிப்பு செபம் வைத்து செபிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். மற்றவர்களும் அங்கு நடந்து வந்து சேர்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவை இரண்டுமே அழகானவையே. செபிக்க மற்றும் நடக்க. ஒவ்வொருவரும் இந்த இரண்டையும் தங்கள் வாழ்வில் செய்யவேண்டும். செபிக்க: நம்முடைய இதயத்தை கடவுளுக்காக திறந்து வைப்பது, ஏனென்றால் அவரிடமிருந்துதானே நாம் சக்திபெறுகிறோம். நடக்க: நாம் ஒரே இடத்தில் நிலையாக இருந்துவிடமுடியாது. இளைஞன் தன் 20 ஆம் வயதில் ஒய்வுபெறமுடியாது. அவன் தொடர்ந்து மேல்நோக்கி உயர்ந்த நேர்கொண்ட பாதையில் நடந்துகொண்டே இருக்கவேண்டும். 

உங்களில் ஒருவர் என்னிடம் சொல்லலாம்: ஆம், தந்தை, சில வேளைகளில் நாம் பலவீனமாகிவிடுகிறேன். நான் விழுந்துவிடுகிறேன். இது பெரிய காரியமில்லை. அல்பின் பாடல் ஒன்று உண்டு, அது இவ்வாறு சொல்கிறது: இறங்கிவரும் கலையில், எது முக்கியம் என்றால், விழாமல் இருப்பதில்லை, மாறாக விழுந்தே கிடக்காமல் இருப்பது. 
நான் உங்களுக்கு அறிவுரையாக கூறுவதும் இந்த இரண்டு கருத்துகள்தான்: ஒருபோதும் விழுந்தே கிடந்துவிடாதீர்கள். உடனடியாக எழுந்திருங்கள், மற்றவர்களும் எழுந்திருக்க உதவலாம் என்பது முதலாவது அறிவுரை.  

இரண்டாவது அறிவுரை: நீங்கள் உட்கார்ந்து இருப்பதிலேயே உங்கள் வாழ்க்கையைக் கடத்திவிடதீர்;கள். வாழ்க்கையை வாழுங்கள். வாழ்வை உருவாக்குங்கள். முன்னேறிச் செல்லுங்கள். எப்பொழுதும் முன்னேற்றத்தின் பாதையில் சென்றுகொண்டே இருங்கள். உங்களை முழுவதும் அர்ப்பணியுங்கள். அப்பொழுது நீங்கள் அற்புதமான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்பள் என நான்  உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். நான் உங்களுக்காகச் செபிக்கிறேன். நீங்களும் எனக்காகச் செபிக்கிறேன். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரவு விழிப்பு செபம் செய்ய திரண்டிருந்த தாய்லாந்து இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக திருத்தந்தையின் திருத்தூதுர் அலுவலகத்திலிருந்து காணொளியில் அவர்களுக்கு செய்திகொடுத்தார்.  நன்றி: செனிட் 

 

Add new comment

1 + 7 =