புகலிடக் கோரிக்கையாளருக்கு உதவிய பாதிரியார் மீது நடவடிக்கையை கைவிடுமாறு கோரும் மனித உரிமைகள் அமைப்பு


An Image of Fr. Norbert Velly.

புகலிடக் கோரிக்கையாளருக்கு உதவிய பாதிரியார் மீது நடவடிக்கையை கைவிடுமாறு கோரும் மனித உரிமைகள் அமைப்பு

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட ஒருவருக்கு தங்குமிடமும் பணமும் கொடுத்து உதவிய ஒரு பாதிரியார் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிடுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஒன்று சுவிஸ் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

 ஆராதனை நடத்திக் கொண்டிருக்கும்போது பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நார்பட் வேல்லி என்ற அந்தப் பாதிரியார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதா இல்லையா என்பது குறித்து நாளை அரசு வழக்கறிஞர் முடிவு எடுக்க உள்ள நிலையில்,

 ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அந்த மனித உரிமைகள் அமைப்பு அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு சுவிஸ் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 பாதிரியார் நொர்பேர்ட் வெல்லி  மீது டோகோ  நாட்டை சேர்ந்த ஒருவரை சட்டவிரோதமாக தங்க வைப்பதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 அதனைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் அபராதத் தொகை செலுத்த அவர் மறுத்ததால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதா இல்லையா என்பதை அரசு வழக்கறிஞர் முடிவு செய்திருக்கிறார்.

 பாதிரியார் நொர்பேர்ட் வெல்லி ஐ  குறிப்பதன் மூலம் அவரது இறக்க செயல்களை குற்றப்படுத்துவதன் மூலம்  கைதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவ விரும்புவோர் மனிதாபிமான நடவடிக்கைகளை முடக்க அதிகாரிகள் எந்த அளவுக்கும் துணிவார்கள்  என்பது தெளிவாக தெரிகிறது என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியிருக்கிறது.

 நொர்பேர்ட் வெல்லி   எந்த தவறும் செய்யவில்லை கஷ்டத்தில் இருந்த ஒரு மனிதருக்கு அவர் இறக்கம் காண்பித்த அவர் பாராட்டப்பட வேண்டும் என்றும்,  அவருக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்றும்  கூறியுள்ள  அந்த அமைப்பு,  உடனடியாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
 

Add new comment

9 + 0 =