Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
'உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்' இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த செய்தி அரசு பகுப்பாய்வு ஆய்வக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமை செயலாளர் ஹரிதா அறிவித்திருக்கிறார்.
இதற்கு பயன்படுத்தப்படும் திரவம் இலங்கையில் புற்களை அழிக்க பயன்படுத்த தடை செய்யப்பட்ட இரசாயன பொருள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு கொண்டு வரப்படும் பழங்களில் தடை செய்யப்பட்ட இரசாயனம் உள்ளதா என்பது தொடரில் தொடர்பில் அரச பகுப்பாய்வு ஆய்வகம் அனைத்து மாவட்டங்களிலும் பழங்களின் மாத்திரைகளை பயன்படுத்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Add new comment