இணையதளத்தின் சக்தி! நூறு திமிலங்கள் விடுதலை!


An Image of wales captured. Image from yahoo news UK.

நூறு திமிங்கலங்களை சிறைவைத்த ரஷ்யாவிற்கு  சமூக வலைதளங்களில் குவிந்த எதிர்ப்புக்குரலால்  தற்பொழுது அதை விடுவிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

 ரஷ்யாவில் சமீபத்தில் சுமார் 100 திமிங்கலங்களை அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாக கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியன. இது சூழலியலாளர்கள் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியது.

அதுமட்டுமின்றி திமிங்கிலங்களை வணிக நோக்கத்திற்காக விற்பதற்கு அதிகாரிகள் சிறை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

 இதனால் பிடித்து வைத்துள்ள திமிங்கலங்களை ரஷ்ய உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி பிரபல இணைய தளமான சேஞ்ச்.ஒஆர்ஜி  இணையதளத்தில் ஒரு ஆன்லைன் மனு உருவாக்கப்பட்டது.

 அதன்பின் அந்த மனு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, ஹாலிவுட் நடிகர், பல்வேறு பிரபலங்கள் என  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு  கடிதம் எழுதி இருந்தனர்.

 அதன்பின் இந்த மனு விரைவில் 15 லட்சம் பேரால் கையெழுத்திடப்பட்டது.
 திமிங்கலம் விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் எழுந்ததால் தற்போது திமிங்கிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் ஆராய்ச்சி நோக்கத்திற்காக மட்டுமே முன் அனுமதியுடன் திமிங்கலங்களை பிடிக்க முடியும்.

 சமூக ஊடகங்களில் உருவான அழுத்தம் காரணமாக திமிங்கிலங்களின் விடுதலை சாத்தியமாகி  இருப்பதாகவும் இதனால் இணையதளம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உணர முடிகிறது என இணையவாசிகள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Add new comment

2 + 2 =