சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 13

நன்றியுணர்வு என்பது இதயத்தின் நினைவு. ஒரு தொழுநோயாளிதான் நன்றி சொல்ல வந்தார் என்து மிகவும் அதிர்ச்சியான விசயம். நற்செய்தி வாசகம் நாமானின் வாழ்வில் நிகழ்ந்ததை நினைவுபடுத்துகிறது. பழங்காலத்தில் மிகவும் பயப்படக்கூடிய நோய் என்பது தொழுநோய். நாமான் அந்த சிறுமியின் வார்த்தையை நம்பி ஆராம் அரசனின் அனுமதியுடன் இஸ்ரயேல்  அரசன் வழியாக எலிசா இறைவாக்கினரின் தூதரைச் சந்திக்கிறார். 

யோர்தான் ஆற்றங்கரையில் ஏழுமுறை மூழ்கச்சொல்கிறார். அது அவருக்கு மிகவும் எளிமையானதாக இருந்தபோதிலும், செய்கிறார். உடல் குணம் பெற்றார், ஆன்ம நலம் பெற்றார். பின் எலிசாவை சந்திக்கிறார். இறைவாக்கினரின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அவரை சந்தித்து, புனித நீரில் கழுவியதும் முழு குணம் பெறுகிறார். இஸ்ரயேலின் கடவுளைக் கண்டு கொள்கிறார்.

நற்செய்தியும் இத்தகைய மனிதரைப் பற்றிச் சொல்கிறது. இயேசு தன்னுடைய கல்வாரி நோக்கிய பயணத்தில் இவர்களைச் சந்திக்கிறார். சமூகத்தில் இவர்கள் பார்க்கப்பட்டவிதம் மிகவும் மோசமானதாக இருந்தது.

ஐயா எங்கள் மீது இரங்கும் என்கிறார்கள். ஆங்கிலத்தில் அதில் மாஸ்டர் என்று குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அவரின் சீடர்களாக பாவிக்கிறார்கள் எனலாம். அவர்கள் நலம் பெறுகிறார்கள். ஆனால் அதன் உண்மையான நோக்கத்தை அறிந்துகொள்ள மறுக்கிறார்கள். இயேசுவைச் சந்திக்க தவறுகிறார்கள். ஒரு சமாரியர் மட்டுமே சந்திக்கிறார். கடைசியில் இயேசு அவருக்கு நற்செய்தி அறிவிப்பிற்கான பணியைக் கொடுக்கிறார். 17:19: எழுந்து செல்லும்... இந்த குணப்படுத்தலில் உடல் நோய் குணமாதல், மனம்மாறுதலும் பின்னிபிணைந்துள்ளது. அவர்கள் இயேசுவிடம் வந்தபோது முழுமையாக நடைபெறுகிறது. 

நற்செய்தி அறிவிப்பு பணியில் திருஅவை கடவுளின் மீட்பின் அருளை கொண்டுவருகிறது. ஏனெனில் மீட்பின் அருள் நம்மை பாவத்தின் அழிவிலிருந்தும் சாவிலிருந்தும் பிரித்து நம்மை புதியவர்களாக உருவாக்குகிறது. திருஅவையின் புதிய யோர்தான் நதியில் திருமுழுக்கால் இணைக்கப்பட்ட நாம் அனைவரும் நற்செய்தி அறிவிப்பாளர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறோம். எழுந்து நம் வழியில் நம் இல்லம் செல்வோம். 2 அரச 5:14-17, திமொ 2:8-13, லூக்கா 17:11-19

Add new comment

1 + 0 =