Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
காத்தரீனா சச்சினி
யார் இவர்: அன்னை கேத்தரீனா செச்சினீ இத்தாலி நாட்டில் வெனீஸ் நகரில் 1877 மே 24 இல் பிறந்தார். நற்கருணை வழி நற்செய்தி அறிவிப்புக் கொள்கைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தபின், 1948 அக்டோபர் 17 ஆம் தேதி தன்னுடைய ஆவியை கடவுளிடம் ஒப்படைத்தார். தன்னுடைய சபையின் சட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதியிருந்தது அவரில் நிறைவுற்றது: நம்முடைய மண்ணுலக வாழ்வின் இறுதியில் சாவின் விளிம்பில் இயேசு வெளிப்படுத்தியதுபோல நம்முடைய இதயமும் வெளிப்படுத்தும் ஓர் அன்பின் வார்த்தை – எல்லாம் நிறைவேறிவிட்டது.
அப்படி என்ன செய்தார்?
அவருடைய முழு சக்தியையும் கொண்டு இறையாட்சி பணியை உலகெங்கும்; வாழும் உண்மையான ஏழைகளுக்கு எடுத்துசெல்ல வேண்டுமென முயன்றார். உண்மையான ஏழை என்பதற்கு இறைவனை இன்னும் அறியாதவர்களே என்று புதிய பொருள் கொடுத்தார். உண்மையான மனிதனை சந்திப்பதுபோல கத்தரீனா நற்கருணையில் பிரசன்னமாயிருக்கும் இயேசுவைச் சந்தித்தார். நம் வாழ்வை மாற்றக்கூடிய சக்தி அவருக்கு மட்டுமே இருக்கிறது என்பதனை அறிந்திருந்தார்.
கேத்தரீனுடைய வாழ்வும் ஆன்மீகமும் நற்கருணை ஆண்டவரிடம் மையம்கொண்டிருந்தது. இரவு நேரங்களில்கூட நற்கருணை பேழையின் முன் அமர்ந்து அதிக நேரம் செபிப்பதில் அவர் சக்தியும் ஆற்றலும் பெற்றார்.
என் கடவுளே! நான் உம்முடைய அன்பின் திருத்தூதராக விரும்புகிறேன். பிறரன்பின் மறைசாட்சியாக விரும்புகிறேன். என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உமது அன்பை உலகறியச் செய்யவும். உமது மாட்சிக்காகவும், ஆன்மாக்களின் நலனுக்காவும் செலவழிக்க விரும்புகிறேன் என தன்னை அமல அன்னை வழியாக ஒப்படைத்தார்.
சியன்னா நகர் புனித கேத்தரீன் நற்செய்திப் ஒன்றிப்பு - இது தனிப்பட்ட வார்த்தைபாட்டினால் இணைக்கப்பட்ட பெண்கள் குழு. அவர்கள் ஒவ்வொரு மாதமும் சந்தித்து நற்செய்தி அறிவிப்பிற்காக சில மணிநேரங்கள் வேலைசெய்தார்கள், நற்செய்தி அறிவிப்பு பணி செய்பவர்களுக்காக செபித்தார்கள்.
நற்செய்தி அறிவிப்பு ஆய்வகம் என்னும் இயக்கத்தை உருவாக்கினார். அதாவது பணியும் செபமும் மட்டுமே நம்முடைய இலக்கின் உச்ச வினையை அடைய உதவும் என நம்பிக்கையற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்.
மாசில்லாக் குழந்தைகளின் சின்ன திருதூதர்கள் என்னும் நிறுவனத்தையும் உருவாக்கினார். அங்கே நற்செய்தி அறிவிப்புப் பணிக்காகச் செபித்தார்கள்.
1933 ஏப்ரல் 10 ஆம் நாள் திவ்ய நற்கருணையின் நற்செய்தி அறிவிப்பு பணியாளர்கள் சபையை தோற்றுவித்தார். எந்த நற்செய்திப் பணியாக இருந்தாலும் அதில் செபமும் தியாகவும், அர்ப்பணமும் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்.
நாம் என்ன செய்ய முடியும்!
நற்கருணை ஆண்டவரில் நம்மை முழுமையாகக் கரைத்து, வாழ்வின் சாவால்களைச் சந்திக்க தேவையான சக்தியையும் ஆற்றலையும் பெற்று, பிறருக்கும் அவற்றைக் கற்றுக்கொடுக்கவேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களை: www.tamil.rvasia.org முகவரியில் காணலாம்.
-
Follow Radio Veritas Tamil Facebook : http://youtube.com/VeritasTamil
-
Twitter : http://twitter.com/VeritasTamil
-
Instagram: http://instagram.com/VeritasTamil
-
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
-
Website :http://www.RadioVeritasTamil.org
-
Blog: http://tamil.rvasia.org
More more info: http://www.october2019.va/en.html
The Extraordinary Missionary Month October 2019 Pope Francis announced the Extraordinary Missionary Month October 2019 to celebrate the 100th anniversary of Pope Benedict XV's Apostolic Letter Maximum Illud.
Subscribe to Radio Veritas Tamil - http://youtube.com/VeritasTamil
Add new comment