Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்னை அன்னா மரிய டெங்கெல்
யார் இவர்: அன்னா டெங்கெல் அவர்கள் ஆஸ்திரியாவிலுள்ள ஸ்டீக் என்னும் இடத்தில் 1892 மார்ச் 16 இல் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய ஒன்பது வயதில் அவருடைய தாய் இறந்தார். மருத்துவப் படிப்பு படித்து இந்தியாவில் சென்று பணிசெய்ய தாயாராக இருந்த அமெரிக்க, ஐரோப்பிய இளம்பெண்களுக்கு டாக்டர் ஆக்னஸ் மேக்லாரன் அழைப்புவிடுத்தார். ஒரு பெண்ணால் மட்டுமே சாதிக்ககூடிய ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்ய சிறுவதிலிருதே எண்ணிய டெங்கெல் தனது 20 வயதில் மருத்துவப் படிப்புக்காகச் சேர்ந்தார்.
1919 ஆம் ஆண்டு அன்னா தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு, ராவல்பிண்டி (இப்பொழுது பாகிஸ்தான்) என்ற இடத்திலுள்ள புனித கேத்தரின் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். கடினமாக உழைத்த அந்த வேலையில் துறவற அழைப்பை உணர்ந்தார். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 இல் உயிர்துறந்தார்.
இவருக்கு அப்படி என்ன சிறப்பு:
அருள்சகோதரியாக இருந்தால் மருத்துவப்பணி செய்யமுடியாதே என்ற நிலையில், சபை தொடங்குவதற்கான நிதிவுதவியும், பணியாளர்களையும் தேடி அமெரிக்கா பயணம் சென்றார். அங்கே அவருக்கு உதவ ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியரும் முன்வந்தார்கள். அவர்களைக் கொண்டு வாஷிங்டனில் 1925, செப்டம்பர் 30 இல் மருத்துவப்பணி அருள்சகோதரிகள் பக்தசபையைத் தொடங்கினார். அப்பொழுது அருள்சகோதரிகள் மருத்துவராகப் பணிசெய்ய அனுமதியில்லாததால் அவர்கள் வார்த்தைப்பாடு இல்லாத பக்தசபையாக அவற்றை நிறுவினார்கள். அருள்சகோதரிகள் மருத்துவராகப் பணிசெய்ய மறுக்கும் திருஅவைச் சட்டத்தை மாற்றியமையக்க பல ஆண்டுகள் முயற்சிசெய்தார்.
1936 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொறாம் பத்திநாதர் அதற்கு அனுமதி அளித்து கான்ஸ்டன்ஸ் அச்சி செயடுலா என்னும் ஆணைப் பிறப்பித்தார். 1941 ஆம் ஆண்டு பக்தசபையாக இருந்தது, மருத்துவப்பணி அருள்சகோதரிகள் துறவற சபையாக மாறியது. 1959 ஆம் ஆண்டு திருத்தந்தையின் அதிகாரம் பெற்ற சபையாக மாறியது. இவர்கள் மருத்துவப் பணியோடு நின்றுவிடாமல் மக்களின் முழு உடல் ஆரோக்கியத்தையும், கிறிஸ்துவில் அவர்களின் ஆன்ம ஆரோக்கியத்தையும் பேணுகிறார்கள்.
எதிர்காலம் உங்களுக்குரியது. நான் என் காலத்தின் சிரமங்களை புரிந்துசெயல்பட்டபோல நீங்கள் உங்கள் காலத்திற்குரிய சிரமங்களை புரிந்து செயல்படுவதில் கருத்தாய் இருங்கள் என்று கூறி 1973 ஆம் ஆண்டு புதிய தலைமுறையினருக்கு அனைத்தையும் கொடுத்தார். 1976 ஆம் ஆண்டு பக்வாதத்தால் பாதிக்கப்பட்டு, உரோமையிலுள்ள மருத்துவமனையில் இருந்தார். அப்பொழுது புனித திரேசா அவரைச் சந்திக்கச்சென்றார். இந்திய முறையில் புனித தெரசாவின் கைகளைப்பிடித்தவாறு அவருடைய ஆன்மீக ஆசீரை புனித தெரசாவுக்கு அளித்தார்.
நம் என்ன செய்யலாம்:
இன்று நம்மிடையே பலர் மருத்துவப் பணிசெய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவற்றை ஒரு தொழிலாக செய்யாமல், இறைவனின் இரக்கத்தையும், அன்பையையும் தம்மைத் தேடிவருபவர்கள் உணரும் வண்ணம் பணிசெய்ய வேண்டும். நோயாளிகளுக்கும் அனாதைகளுக்கும் உடல் ஆன்ம நலனுக்கான நம்மால் முடிந்த உதவியையும் செபத்தையும் கொடுக்கவேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களை: றறற.வயஅடை.சஎயளயை.ழசப என்னும் இணையதள முகவரியில் காணலாம்.
Download the song and lyrics - http://tiny.cc/53indz
Follow Radio Veritas Tamil
Facebook : http://youtube.com/VeritasTamil
Twitter : http://twitter.com/VeritasTamil
Instagram: http://instagram.com/VeritasTamil
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website :http://www.RadioVeritasTamil.org
Blog: http://tamil.rvasia.org
More more info: http://www.october2019.va/en.html
The Extraordinary Missionary Month October 2019
Pope Francis announced the Extraordinary Missionary Month October 2019 to celebrate the 100th anniversary of Pope Benedict XV's Apostolic Letter Maximum Illud.
Subscribe to Radio Veritas Tamil - http://youtube.com/VeritasTamil
**for non commercial use only**
Add new comment