சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம், இளைஞர் இளம்பெண்கள் சார்பாக சிறப்பு மருத்துவ மற்றும் ரத்த தான முகாம் | வேரித்தாஸ் செய்திகள்


images courtesy: facebook

சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயல் நற்கருணை நாதர் தேவாலயத்தில் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அன்று ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த ரத்த தான மற்றும் இலவச மருத்துவ முகாமினை ஸ்டாலின் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்புற நடைபெற உதவினர்.

அரசு ஸ்டாலின் மருத்துவமனை இரத்த வங்கி பிரிவு இரத்த தான முகாமினை வழிநடத்தி குருதிக்கொடைகளை பெற்றுக்கொண்டனர். இந்த முகாமில் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் குருதிக்கொடை அளித்தனர். 200 க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவ முகாமில் பங்கேற்று பயன் அடைந்தனர்.

இந்த முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் திருமுல்லைவாயல் பங்கின் பங்குத்தந்தை அருள்தந்தை. மனுவேல் வழிநடத்துதலோடு  இளைஞர் இளம்பெண்கள் செய்து இருந்தனர்.

 

-அருள்பணி வி.ஜான்சன்

 

Comments

Blood donation is best donation to save the people's my best wishes to Radio Veritas Tamil doing the campaign

Add new comment

1 + 1 =