மாற்றம் தரும் இளைய சமுதாயம் - ஆயர் சூசை நசரேன்


கத்தோலிக்க இளைஞர்கள் மாற்றம் தரும் சமுதாயமாக இருக்க வேண்டும் என கோட்டாறு மறைமாவட்ட ஆயர் சூசை நசரேன் தெரிவித்துள்ளார்.
 
மே 23 அன்று சென்னை, பூந்தமல்லியில் உள்ள தூய இருதய குருத்துவ கல்லூரியில் இந்திய இளம் கத்தோலிக்க மாணவர்கள்/இளம் மாணவர்கள் இயக்கத்தின் 28வது மாநாடு மற்றும் 19 வது தேசிய ஆலோசனை கூட்டமானது தமிழக ஆயர் மேதகு ஆயர் சூசை நசரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
சர்வதேச இளம் கத்தோலிக்க மாணவர்கள் (IYCS) அமைப்பானது, அமைதி, நீதி மற்றும் நிலையான உலகை உருவாக்க உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இதில்  இந்திய இளம் கத்தோலிக்க மாணவர்கள்/இளம் மாணவர்கள் அதாவது YCS/YSM இந்தியாவில் செயலாற்றி வரும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு அனைத்து கத்தோலிக்க பள்ளிகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 
1946 இல் நிறுவப்பட்ட இந்த கத்தோலிக்க அமைப்பானது, பள்ளிகளில் பயிலும் கத்தோலிக்க இளைஞர்களை மனிதாபிமான நடவடிக்கைகளை மேம்படுத்தவும், சமத்துவமின்மை மற்றும் அநீதியை எதிர்த்துப் போராடவும், அமைதியை முன்னெடுத்துச் செல்லவும், தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய ஒற்றுமையை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் ஆர்வமுடனும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற கத்தோலிக்க நம்பிக்கையில் வளர்ந்த இளம் உள்ளங்களை ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒரு அமைப்பாக இந்த அமைப்பு இன்று வரை செயலாற்றி வருகிறது.

கோட்டாறு மறைமாவட்ட ஆயர்   சூசை நசரேன் அவர்கள், கடவுள் நம் அனைவருக்கும் ஒரு அழைப்பை கொடுத்துள்ளார் என்ற தலைப்பில் உரையாற்றினார். நாம் அனைவரும் நமது அழைப்பிற்கு ஏற்ற வாழ்வு வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம். அதன்படி வாழ இந்த இளைய தலைமுறைக்கு மிக பெரிய கடமையும் அர்ப்பண உணர்வும் தேவை என்று அவர் கூறினார்.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பல மாநிலங்களை சார்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்புற நடத்தி வருகின்றனர்.

காலையில் நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக இந்த தேசிய மற்றும் இந்திய இளம் கத்தோலிக்க மாணவர்கள்/இளம் மாணவர்கள் இயக்கத்தின் 28வது  பேரவையின் தொடக்க விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேதகு ஆயர் சூசை நசரேன், மற்றும் தமிழ்நாடு இளைஞரணி இயக்குநர் அருள்பணி மார்ட்டின் ஜோசப் தேசியக் கொடியையும், ஒய்சிஎஸ்/ஒய்எஸ்எம் கொடியையும் ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தனர். 
 
நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்தியாவின் வளம் மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் அனைத்து மாநிலங்களின் சிறப்புகள் குறித்த கண்காட்சி மையங்களின்  திறப்பு விழா நடைபெற்றது அதனை அனைவரும் கண்டு களித்தனர். இந்த கண்காட்சி மையங்கள் பல மாநிலங்களின் சிறப்புகளை தெரிந்து கொள்ள உதவியது.
 
முதல் நாள் நிகழ்வின் சிறப்பு  விருந்தினரான கேத்தரின் சாரியானா சிறப்பு உரை ஆற்றும்போது இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்வில் மிக  உன்னதமான பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், அவர்களின் தனித்திறமைகளை கண்டுணர்ந்து அதற்க்கு ஒரு வடிவம் கொடுத்து அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறினார். தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு வாய்ப்புகளை உருவாக்கி அதன்படி செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் தங்களின் கனவுகளையும் திறமைககளையும் புறக்கணித்து விட வேண்டாம் என்றும் இன்றைய இளைய தலைமுறையே நாளைய தூண்கள் அதனை உணர்ந்து அனைத்து துறைகளிலும் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் மற்றும் அனைத்து அம்சங்களிலும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
 
அதன்பின்னர் தமிழக மாணவர்களால் சிறப்பாக கொடுக்கப்பட்ட கலைநிகழ்ச்சிகள் வழியாக தமிழ்நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரம் நாட்டுப்புற கலைகள் வழியாக வெளிப்படுத்தப்பட்டது.
 
தொடக்க விழாவின் முக்கிய உரையை முன்னாள் தேசிய மற்றும்  இந்திய  இளம் கத்தோலிக்க மாணவர்கள்/இளம் மாணவர்கள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்  அருள்பணி சார்லஸ் மெனிசஸ் அவர்கள் சிறப்பாக எடுத்துரைத்தார். ஒரு இயக்கம் எப்போதும் இயக்கத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே அது ஒரு இயக்கம்  என்று அழைக்கப்படும் மேலும் ஒரு இயக்கத்தின்  உணர்வைப் பற்றவைப்பதற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான் காரணம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும், என்ற மனப்பான்மையுடன் அனைத்தையும் செய்யுமாறு  அங்கு கூடி இருந்த அனைத்து மாணவர்கள மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு  அவர் அறிவுறுத்தினார். மேலும்  உங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் கூறும் கருத்துக்களுக்கு செவி கொடுங்கள் 
 
உங்களுக்கு எப்போதும் ஒரு நம்பிக்கையான எதிர்காலம் இருப்பதால் அதனை நீங்கள் உங்கள் வாழ்வில் செயல்படுத்த உங்களை நீங்களே மதிப்பீடு செய்து அதற்க்கு ஏற்றவாறு உங்களை நீங்களே செதுக்கி கொள்ள வேண்டும் என்று கூறினார். 

_அருள்பணி வி.ஜான்சன்

(Source from RVA English News)

Add new comment

5 + 4 =