இந்தியா: CCBI புதிய திருத்தப்பட்ட அருள்பொழிவு திருச்சடங்கு பதிப்பை வெளியிடுகிறது | வேரித்தாஸ் செய்திகள்


2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று புதிய திருத்தப்பட்ட  அருள்பொழிவு திருச்சடங்கு  நூல் மும்பை  பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கர்தினால் கிரேசியாஸ் அவர்களால் வெளியிடப்பட்டது, அதன் முதல் பிரதியை பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ பெற்றுக்கொண்டார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பெங்களூரு பேராயர் இல்லத்தில்  நடைபெற்ற எளிய மற்றும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியில், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (சிசிபிஐ) துணைப் பொதுச்செயலாளர் அருள்பணி  ஸ்டீபன் அலத்தாரா, இணை இயக்குநர் அருள்பணி  விக்னன் தாஸ் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

புதிதாக திருத்தப்பட்ட  திருச்சடங்கு  நூல் ஆயர்கள், குருக்கள்  மற்றும் திருத்தொண்டர்கள்  நியமனத்திற்காக தற்போது பயன்படுத்தப்படும் திருச்சடங்கு நூலுக்கு   பதிலாக மாற்றப்படும். திரு வழிபாடு மற்றும் திருஅருள்சாதனங்களின்   ஒழுங்குமுறைக்கான பேராயம், ஆயர்கள், குருக்கள்  மற்றும் திருத்தொண்டர்கள்  அருள்பொழிவின்  புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அங்கீகரித்தது, ஆயர்கள் திருப்பொழிவின்  ஆங்கில மொழிபெயர்ப்பு, குருத்துவ அருள்பொழிவு , மற்றும் திருத்தொண்டர் அருள்பொழிவு , பதிப்பு மாதிரி மாற்றம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (1990 மற்றும் 2011) 

ஆயர்கள், குருக்கள்  மற்றும் திருத்தொண்டர்கள்  அருள்பொழிவின்  புதுப்பிக்கப்பட்ட பதிப்பை ஜனவரி 7 முதல் 14, 2019 வரையிலான இந்திய கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டின் 31வது முழுமையான பேரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

பிப்ரவரி 22, 2021 அன்று, இறை வழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான பேரவையின்  ஆணையின் மூலம், மாநாட்டுப் பகுதி முழுவதும் அதன் பயன்பாட்டை  திருத்தந்தை ஆட்சிபீடம் அங்கீகரித்தது.

CCBI இன் தலைவர் கர்தினால்  ஃபிலிப் நேரி,  நவம்பர் 11, 2022 அன்று ஒரு ஆணையை வெளியிட்டார்: இந்திய கத்தோலிக்க ஆயர்களின் மாநாடு இதன் மூலம் ஆயர்கள், குருக்கள்  மற்றும் திருத்தொண்டர்களை  அருள்பொழிவு செய்வதற்கான வழிபாட்டு முறைக்கான நியமனம் என்ற பதிப்பை வெளியிட ஆணையிடுகிறது. இந்தியாவில் உள்ள லத்தீன் கத்தோலிக்க திருஅவையின்  அனைத்து மறைமாவட்டங்களிலும் இந்த தேதியிலிருந்து பயன்படுத்தவும், தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து முந்தைய வெளியீடுகளையும் மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவின் கத்தோலிக்க ஆயர்களின் மாநாடு ஆயர்கள், குருக்கள்  மற்றும் திருத்தொண்டர்கள்  அருள்பொழிவு திருச்சடங்கு நியமனத்தை வெளியிடுகிறது.

நகல்களுக்கு, CCBI தலைமைச் செயலகத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது அலைபேசி  எண்: +91-9886730224.

அருள்பொழிவு திருச்சடங்கு புதிய பதிப்பு ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கிறது  கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்: 

https://joyofgifting.com/product/ORDINATION-OF-BISHOPS-PRIESTS-AND-DEACONS-9418/

_அருள்பணி.வி.ஜான்சன் SdC

(Source from RVA English News)

Add new comment

3 + 7 =