இந்திய கத்தோலிக்க திருஅவை ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது || வேரித்தாஸ் செய்திகள்


இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CCBI) தலைவர் கர்தினால்  ஃபிலிப் நேரி ஃபெரோ மற்றும் கோவா மற்றும் டாமன் பேராயர் கத்தோலிக்க மக்களை இணைக்க கத்தோலிக்க மொபைல் செயலியின் சோதனை பதிப்பை பெங்களூரில் உள்ள புனித ஜான்  தேசிய சுகாதார அறிவியல் அகாடமியில் நடந்த CCBI இன் 92வது செயற்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்தினர். 

CCBI இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மீடியா மறைபரப்பு பணிக்கான  கத்தோலிக்க இணைப்பை உருவாக்கியுள்ளது, இது இந்திய கத்தோலிக்க சமூகத்தை இந்தியாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் இணைக்கும் ஒரு பயன்பாட்டு தளமாகும்.

இந்தப் பயன்பாட்டின் மூலம், பயனர்கள் ஆன்மீக செய்திகள்  மற்றும் ஆன்மிகம் தொடர்புடைய செய்தித் தகவல்களையும், கல்வி, சுகாதாரம், திருமணம் மற்றும் வேலை வாய்ப்பு  தகவல்களையும் இந்த செயலி பயன்பாட்டின் மூலமாக  கத்தோலிக்க வாழ்க்கைச் சேவைகளையும் அணுக முடியும்.

இந்த செயலியின் மூலம் நமக்கு அருகிலுள்ள தேவாலயங்களைக் கண்டுபிடிப்பதுடன், இந்தியாவில் உள்ள தேவாலயத்தின் சேவைகளைப் பயனர்கள் பயன்பாட்டின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய கத்தோலிக்க கவுன்சிலின் 88வது செயற்குழுவின் கூற்றுப்படி, கத்தோலிக்க நம்பிக்கையாளர்களை இணைக்கும் ஒரு டேட்டாபேஸ் செயலியை உருவாக்கும் என்ற முடிவின்படி தற்போது இந்த செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. 

இந்த திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது லத்தீன் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின்  தேசிய தரவுத்தளத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்துடன் பணியாற்ற  வழி வகுக்கும், இது திருஅவையில்  குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது நாம் எதிர்பார்க்கும் ஒன்றாகும். 

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் உள்ள கமிஷன்கள் மற்றும் அவற்றின் அனைத்து செயல்பாடுகள், பயிற்சி மற்றும் திட்டங்கள் பங்குதாரர்களாகவும், கத்தோலிக்க நிறுவனங்கள்,  மற்றும் சங்கங்கள் என அனைத்து செயல்பாடுகளும் இந்த செயலி மூலம் அனைவருக்கும்  வெளிப்படுத்தப்படும்.

இந்த செயலி மூலம், இந்திய கத்தோலிக்க திருஅவையானது  14 வெவ்வேறு திருஅவை  பகுதிகளிலிருந்து செய்திகளையும் தகவலையும் ஒளிபரப்ப முடியும், மேலும் CCBI இன் செயலர்கள் வரவிருக்கும் புதிய திட்டங்களையும் செயல்பாடுகளையும் நேரடியாக இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும், இதனால் அதிகமான மக்கள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2024 இல் Android மற்றும் IOS இயங்குதளங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய செயலி பதிப்பை இறுதி செய்வதற்காக சோதனை பதிப்பு பெங்களூர் உயர்மறைமாவட்டத்தில் சோதனை மற்றும் கருத்துக்காக வெளியிடப்பட்டது.

பரிந்துரைகள் மற்றும் கருத்துகளுக்கு, நீங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  எழுதலாம் அல்லது Fr. சிரில் விக்டர், ஒருங்கிணைப்பாளர், CCBI மீடியா 9886424928 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பகிரலாம் அல்லது தெளிவு பெறலாம்.

 

-அருள்பணி வி.ஜான்சன் SdC

https://www.rvasia.org/asian-news/indian-catholic-church-introduces-mobi...

Add new comment

13 + 1 =