ஆசியாவின் ஆயர்கள் பேரவையின் கூட்டமைப்பு (FABC) 50வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகிறது | வேரித்தாஸ் செய்திகள்


 

ஆசியாவின் ஆயர்கள் பேரவையின் கூட்டமைப்பு (FABC) முதல்  பொது மாநாட்டை  பாங்காக்கில் உள்ள பான் ப்ஹு வான் மேய்ப்பு பணிநிலையத்தில் 50வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடுகிறது.

 

1970ல், திருத்தந்தை ஆறாம் பால் மணிலாவிற்கு வருகை தந்த சமயத்தில், ஆசிய ஆயர்கள் முதன்முறையாக ஒன்று கூடினர். அந்தச் சந்திப்பிலிருந்து அவர்களிடையே கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான விருப்பமும், தேவையின் அடிப்படையில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆசியாவில் திருஅவை  என்றால் என்ன என்பதை வரையறுத்து வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது, ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பு - FABC க்கு வழிவகுத்தது. 29 ஆசிய நாடுகளை சார்ந்த கர்தினால்கள், 180 ஆயர்கள் ​​மற்றும் பாமர மக்கள் உட்பட சுமார் 200 பிரதிநிதிகள் கூடினர். 

 

இந்த நிகழ்வு முதலில் 2020 இல் திட்டமிடப்பட்டது, ஆனால் உலகில் ஏற்பட்ட கொரோனா என்ற தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

பொது மாநாட்டிற்கான தனது வீடியோ செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ், ஆசியாவில் உள்ள திருஅவை ஏழைகளின் திருஅவை, இளைஞர்களின் திருஅவை மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த சகோததரர்களுடன்  உரையாடும் ஒரு திருஅவை என்று கூறினார்.

ஆசிய ஆயர்கள் கூடிவருகையில், “அடிப்படையான கேள்வி: ஆசியாவில் உள்ள தேவாலயங்களுக்கு ஆவியானவர் என்ன சொல்கிறார்? அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்று திருத்தந்தை கூறினார்

 

தொடக்க வரவேற்பு உரையில், FABC இன் தலைவரான கார்டினல் சார்லஸ் போ, பொது மாநாட்டை “அருளின் தருணம்!  இது பெந்தகோஸ்தே தருணம்!” என்று கூறி அனைத்து பங்கேற்பாளர்களையும் வரவேற்று அவர் பேசினார் பொன்விழாவைக் கடக்கும் FABC தூய ஆவியானவர் துணையோடு ஒரு புதிய வரலாறு தொடங்குகிறது இது நமது ஆசியாவின் தருணம். "இந்தத் தருணத்தை, திருஅவை வரலாற்றில் ஆசியாவின் தருணமாக மாற்ற ஒன்றிணைவோம்." என்று கூறினார்

முன்னதாக, பாங்காக் பேராயர் கர்தினால் பிரான்சிஸ் சேவியர் கிரியெங்சாக் கோவிட்வனிட், பிரதிநிதிகளை வரவேற்றார்.

தாய்லாந்தின் கலாச்சார அமைச்சர் இட்த்திபோல் குன்ப்ளமே அரசாங்கப் பிரதிநிதியாக தொடக்க விழாவில் கலந்துகொண்டு புன்னகையின் உலகத்திற்க்கு அனைத்து பிரதிநிதிகளையும் வரவேற்றார்.

தொடக்க விழாவில் பேசிய, மும்பை (இந்தியா) பேராயர் மற்றும் FABC 50 இன் சிறப்பு அழைப்பாளரான கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ், "ஆசியாவில் திருஅவையை மீண்டும் உறுதிப்படுத்தவும், புதுப்பிக்கவும் மற்றும் புத்துயிர் பெறவும்" இந்த பொது மாநாடு உதவும் என்றார்.

ஒரு சில விஷயங்களை மாற்ற வேண்டியிருக்கும் போது, மாற்றங்களை  விட்டுவிடுவதற்கான தைரியம், நம் பணியை நிறைவேற்ற புதிய பாதைகளைக் கண்டறியும் ஞானம் மற்றும் இந்த புதிய பாதைகளில் நடக்க வலிமை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

FABC இன் முதல் பொது மாநாடு இதுவாகும், ஆனாலும் கடந்த காலத்தில் 11 கூட்டங்களை நடத்தியுள்ளது.

தற்போது தொடங்கியுள்ள இந்த மாநாடு 2022 அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறும்.

 

FABC 50 பொது மாநாடு, பாங்காக் - தொடக்க விழாவில் ஆயர்கள் மற்றும் பிரதிநிதிகள் FABC பொது மாநாட்டின் முதல் சில நாட்கள், பல்வேறு நாடுகளில் உருவாகி வரும் பிரச்சனைகளையும் அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்வதிலும் அதனைப் பற்றி விவாதிப்பதிலும் செலவிடப்படும். 29 உறுப்பு நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளன.

 

மறைபரப்பு ஞாயிறு, அக்டோபர் 16 அன்று, பங்கேற்பாளர்கள் துறையில் உள்ள பலருடனும், ஆசியாவின் புதிய உண்மைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுடனும் தொடர்புகொள்வார்கள்.  ஆசியாவின் மேய்ப்பர்கள் பல்வேறு ஆசிய நாடுகளில் உள்ள பங்குகளுக்கும் மறைமாவட்டங்களுக்கும் காணொளி வழியாக சந்திக்க வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 17 முதல் 22 வரை, FABC பிரதிநிதிகள் ஆசியாவில் உள்ள சிறப்பு சவால்கள் பற்றிய ஆழமான ஆய்வை மேற்கொள்வார்கள். போப் பிரான்சிஸின் சமீபத்திய ஆவணங்களின் வெளிச்சத்தில், குறிப்பாக Evangelii Gaudium, Fratelli Tutti, Laudato Si', Amoris Laetitia மற்றும் Predicate Evangelium ஆகிய சமீபத்திய ஆவணங்களின் வெளிச்சத்தில் ஆசியாவில் உள்ள திருஅவையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வளர்ந்து வரும் யதார்த்தங்களைப் பற்றிய புரிதலை அவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்வார்கள் .

கலந்துரையாடலின் போது, ​​பங்கேற்பாளர்கள் தொற்றுநோய், உலகமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல், நகரமயமாக்கல், காலநிலை மாற்றம், புலம்பெயர்ந்தோர் நெருக்கடிகள், அரசியல் நிர்வாகம், சமூகத்தில் கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் மாற்றம், குடும்ப விழுமியங்களை மாற்றுவது மற்றும் பாலினம், பழங்குடி மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள். இளைஞர்களின் ஏக்கங்கள், நமது மனித மாண்பு எவ்வாறு பாதிக்கப்படுகிறது, மற்றும் திருஅவை எவ்வாறு மாற்றப்படுகிறது  குறித்து விவாதங்கள் நடைபெறும்.

 திருஅவை தலைவர்கள் குடும்பங்களின் பராமரிப்பு, வழிபாடு, உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் ஊழியத்திற்கான புதிய வழிகளைப் பற்றியும் பேசுவார்கள். சமாதானத்தை கட்டியெழுப்புதவற்காக மற்றும் மதநல்லிணக்கத்திற்காக, இளைஞர்களின் குரலுக்கு செவி கொடுப்பதற்காக,தேவாலயத்தில் பெண்களின் பங்களிப்பு ,மதங்களுக்கு இடையிலான உரையாடல் மூலம் நற்செய்தியை அறிவிப்பதற்காக, திருஅவையை ஆயனின் வழியில் வழிநடத்தி நிர்வகிப்பதற்காக முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஆசியாவின் மக்களின் சேவையில் எதிர்நோக்குடன் கூடிய, பொருத்தமான மற்றும் பதிலளிக்கக்கூடிய ஆசிய  திருஅவையாக மாறுவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்," என்று கார்டினல் கிரேசியாஸ் கூறினார்.

இந்த மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸின் தூதராக திருச்சபைத் தலைவர்களிடம் நற்செய்தியை அறிவிக்கும் துறையின் சார்புத் தலைவர் கர்தினால் லூயிஸ் அன்டோனியோ டேக்லே உரையாற்றுவார்.

அக்டோபர் 30 அன்று, FABC 50 மாநாட்டின் இறுதியில், ஆசியாவில் திருஅவை வழி பற்றிய ஒரு புதிய பார்வை இறுதி அறிக்கை மூலம் வெளியிடப்படும்.

அடுத்த ஆண்டு, FABC உறுப்பினர்கள் இந்த பொது மாநாட்டின் வழியாக உருவான புதிய பாதைகள் மற்றும் திசைகளைப் பற்றி சிந்திப்பார்கள், வருடாந்திர FABC மத்திய குழு கூட்டம் அடுத்த  ஆண்டு மார்ச் 2023 இல் நடைபெறும்.

 

-அருள்பணி .வி.ஜான்சன் SdC

 

Comments

இனிய மாலை வணக்கம்

Add new comment

4 + 1 =