ஆசிய ஆயர்களின் கூட்டமைப்பு (FABC) அதன் 50வது பொது மாநாட்டில் இன்று ஆசிய திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் அவசியம் பகுதி 2 | வேரித்தாஸ் செய்திகள்


மாநாட்டின் இறுதி ஆவணமான, 'ஆசியாவின் மக்களாக இணைந்து பயணிப்பது', இளைஞர்கள், குடும்பம் மற்றும் பெண்களின் பங்கு மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடல் போன்ற பிற சிக்கல்களை அடையாளம் காண்பது.

ஒரு புதிய உலகத்தை எதிர்கொள்ளும் இளைஞர்கள்

ஆசிய ஆயர்கள்  மாநாட்டின் படி, ஆசிய பசிபிக் கண்டத்தில்  உள்ள இளைஞர்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களில் பங்கு பெறுவதற்கும் அதன் பலன்களைப் பெறுவதற்கும் சமீபத்திய ஆண்டுகளை விட இன்று  மிக ஆர்வமாக  உள்ளனர். இன்று இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் முந்தைய தலைமுறைகளை விட சிறந்த கல்வி கற்றவர்களாக உள்ளனர். மூன்றாம் நிலை அளவில் மொத்த சேர்க்கை விகிதம் ஆண்களுக்கு 18 சதவீதமாகவும், பெண்களுக்கு 15 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், கண்டங்களில்  உள்ள இளைஞர்களும்  பலவிதமான சவால்களை எதிர்கொள்வதாக மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது.

தற்போதைய இளைஞர்கள் பல நன்மைகள் மற்றும் வாய்ப்புகளை  கொண்டிருந்தாலும், புதிய வாய்ப்புகள் பெரும் சவால்களுடன் இணைந்து செயல்படும் சிக்கலான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையையும் எதிர்கொள்கிறது. கடுமையான போட்டி இப்பகுதியில் உள்ள சந்தையை பாதிக்கிறது. இளைஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் மற்றும் மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக சூழலுக்கு ஏற்ப தேவையான அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

 ஆசியாவில், 2004ல் இளைஞர்கள் தொழிலாளர் பிரிவில்  20.8 சதவீதமாக இருந்தனர். ஆனால்  நாட்டில்  வேலையின்மை பாதியளவிற்கு 49.1 சதவீதமாக உள்ளது.

நீண்ட கால வேலையின்மை குற்றச்செயல்கள், போதைப்பொருள், அதிகார விதி மீறல்  மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடிய பல சமூக நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மாநாடு குறிப்பிட்டது. பள்ளி செல்லாத இளைஞர்கள் அதிகளவில் போதைப்பொருள் உபயோகத்திற்கு  ஆளாகிறார்கள்.

இன்று 1.2 பில்லியன் இளைஞர்களில் பெரும்பாலோர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்று ஆயர்கள் தெரிவித்தனர். 2005 ஆம் ஆண்டின் தரவுகளின் படி உலக இளைஞர்களில் சுமார் 61.8 சதவீதம் பேர் ஆசிய பசிபிக் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலின பிரச்சினைகள்

ஓரின சேர்க்கையாளர்கள் மிகவும் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பல்வேறு வகையான  அவமானங்கள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பதையும் ஆயர்கள்  அங்கீகரித்துள்ளனர்.

ஜோர்ஜியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை உறவுகள் ஓரளவு பாதுகாப்பு   உணர்வை அனுபவிக்கிறார்கள் அவர்களின் தனிமனித  உரிமை ஓரளவுக்கு பாதுகாக்கப்படுகிறது என்று மாநாடு குறிப்பிட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான், புருனே, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 2021 இல் தலிபான்கள் கையகப்படுத்திய பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள்  நிம்மதியாக வாழ்வது இன்னும் கடினமாக இருக்கிறது.

தி எகனாமிஸ்ட், 2019 இல் நடத்திய ஒரு கணக்கெடுப்பின் மூலம், ஆசியா பசிபிக் பகுதியில்  பதிலளித்தவர்களில் 45 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை இப்பகுதியில் தவிர்க்க முடியாதது என்று கூறினார்கள், மேலும்  31 சதவீதம் பேர் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக பதில் அளித்தனர். பாலினப் பிரச்சினைகள் உண்மையில் சர்ச்சைக்குரிய விஷயங்கள், எனவே மிகுந்த உணர்திறன், விவேகம் மற்றும் கவனிப்புடன் கையாளப்பட வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து உள்ளனர்.

பெண்களின் பங்கு

ஆசியா முழுவதும் பெண்களுக்கு எதிரான  பாகுபாடு, வன்முறை மற்றும் ஒடுக்குமுறை பற்றியும் இந்த மாநாட்டில் கருத்துக்கள் பகிரப்பட்டு உரையாடல் நடத்தப்பட்டது.

பெண்களின்  தலைமைத்துவ திறன்கள் எல்லா இடங்களிலும் குறைவாக மதிப்பிடப்பட்டு  அவர்களின் பங்களிப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன, மேலும் சில சமூகங்கள் இன்னும் பெண்களை ஆணுக்கு எப்போதும் பெண்கள் அடிமை என்ற நிலையை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன.

ஊதிய இடைவெளிகள், உரிமை மற்றும் பரம்பரைச் சட்டங்கள், கல்வி வாய்ப்புகள், கருக்கலைப்பு, சுகாதாரம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பெண்களுக்கு எதிரான பல சார்பு அறிக்கைகள் தங்களிடம் இருப்பதாக ஆயர்கள்  வெளிப்படுத்தினர். பாலின அடிப்படையிலான வன்முறை இன்னும் உள்ளது மற்றும் பாலின பிரச்சினைகள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

திருஅவையில்  உள்ள சிலரின் ஆணாதிக்க மனப்பான்மை மற்றும் சில ஆசிய மதங்கள் மற்றும் சில தென்கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில் உள்ள தூய்மை மற்றும் தடைகள் ஆகியவற்றின் காரணமாக ஆசிய பெண்கள் பெரும்பாலும் தேவாலயங்களில்  சமூகத்திலும் ஓரங்கட்டப்படுகிறார்கள்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் திருமடல் மிக அருமையாக பெண்களின் மாண்பு எப்படி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியது போல, திருஅவை  படிப்பினைகளும் அவற்றை அங்கீகரித்து , திருத்தந்தை பிரான்சிஸின் பிந்தைய மாமன்றத்தில்  அவர் கூறிய அறிவுரை, கிறிஸ்து வாழ்கிறார், எங்கு பெண்மை போற்றப்படுகிறதோ அங்கே கிறிஸ்து உயிர் வாழ்கிறார்  என்ற உயரிய படிப்பினையை நமக்கு கற்றுத்தந்தார் ஆனால் இந்த கோட்பாட்டிற்கும் யதார்த்தத்திற்கும் இடையே இன்னும் பெரிய இடைவெளி உள்ளது என்பது தன உண்மை.

ஒரு திருஅவையை  திறம்பட வழிநடத்தும்போது  அதில்  பெண்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பெரும்பான்மையாக இருந்தாலும், அவர்கள் ஆலய பணிகளில்  முடிவெடுப்பதில் விகிதாசாரமாக ஈடுபடுவதில்லை. பெண்களிடம் ஆண்கள் காட்டும்  ஆணாதிக்க விழுமியங்கள் மற்றும் மனோபாவங்களை உள்வாங்குவதும் திருஅவையில்  பெண்களின் கண்ணியம் மற்றும் பணியைத் தடுக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.

இருப்பினும்  இந்த மாநாடு பெண்களிடம் ஏற்பட்டுள்ள சில முன்னேற்றங்களையும் பதிவு செய்ய மறக்கவில்லை . சமீபத்திய பியூ ஆராய்ச்சி மைய ஆய்வு ஆசியாவில் பெண்கள் தங்கள் குரலைக் கேட்கவும் அங்கீகரிக்கவும் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் பாரம்பரியமாக ஆண்களின் பொறுப்புகளையும், குடும்ப சுமைகளையும்  ஏற்றுக்கொண்டு தைரியமுடன் போராடுகின்றனர்.

குடும்பம், சமூகத்தின் அடித்தளம்

குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு அங்கம் என்றும், மதிப்புகள் மற்றும் நற்பண்புகள் முதலில் கற்பிக்கப்படும் இடம் என்றும் ஆயர்கள் தெரிவித்தனர். அமைதியான குடும்ப வாழ்க்கையை ஆசியர்கள் ஆசீர்வாதமாக கருதுகின்றனர்.

இளைஞர்கள் தனிப்பட்ட மற்றும் சமூக முதிர்ச்சிக்கு வளரும் சாதாரண இடம்  மற்றும் மனிதகுலத்தின் பாரம்பரியத்தை காப்பவர்கள் அவர்கள் தான் என்று மறைந்த முன்னாள் திருத்தந்தை  புனித இரண்டாம் ஜான் பால் இன்றைய இளைய தலைமுறையை பாராட்டி பேசியுள்ளார்.

இருப்பினும், ஆசியாவில் உள்ள குடும்பங்கள் தற்போது அவர்களின் அமைதி, உறுதித்தன்மை  மற்றும் ஒற்றுமையை அச்சுறுத்தும் பல சவால்களை எதிர்கொள்கின்றன. மனித அவலங்கள், வன்முறைகள், போர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக ஏற்படும் மரணம் சில குழந்தைகளை பெற்றோர் அல்லது இருவரையும் இழக்க வைத்து வேடிக்கை பார்க்க வைக்கிறது இந்த சமூகம்.

வெளிநாட்டில் நல்ல ஒரு உயர்ந்த வாழ்க்கை தரத்திற்கு  இடம்பெயர்ந்ததன் மூலம் குடும்ப உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் பிரிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதற்காக விட்டுச் சென்ற குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களை உறவினர்கள் ஆதரிக்கிறார்கள் மற்றும் கவனித்துக்கொள்கிறார்கள் எனபது சற்று ஆறுதலான அணுகுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களுக்கு அதிக வாய்ப்பு  உள்ள பகுதிகளில், கலாச்சார உலகமயமாக்கலால் குடும்பத்தின் மீதான அணுகுமுறை மோசமாக பாதிக்கப்படுகிறது. மேலும், அரசாங்கத்தின் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் திருமணம், குழந்தைப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான அணுகுமுறைகளையும் பெரிதும் பாதிக்கின்றன.

மதங்களுக்கு இடையிலான உரையாடல்

ஆசியாவில் இந்து மதம், பௌத்தம், சமணம் மற்றும் பல விதமான மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்கள் செழித்து வளர்கின்றன என்று ஆயர்கள் தெரிவித்தனர். வெவ்வேறு மதங்களுக்கு  இடையே போட்டி எப்போதும் எழலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் மற்ற மதங்களுடன் போட்டி போடக்கூடாது. கிறிஸ்தவ நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் அதற்கு பதிலாக நற்செய்தியைப் பரப்புவதிலும் கிறிஸ்தவர்கள் ஈடுபட வேண்டும் அதுதான் நமக்கான பணி.

திருஅவை  மற்றும் தனிப்பட்ட கிறிஸ்தவர்களின்  மதிப்பு, அர்ப்பணிப்பு, அழகு, மகிழ்ச்சி மற்றும் அன்பு  ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகத்திற்கு  ஏதாவது வழங்க வேண்டும் அது நம்மால் முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும். உண்மையில், போட்டி நிறைந்த இந்த உலகில்  முடங்கிப்போயிருக்கும் உலகிற்கு சாத்தியமான நெறிமுறை மற்றும் தார்மீக வழிகாட்டுதல்களை வழங்கக்கூடிய ஒரு விரிவான உலகக் கண்ணோட்டம் காலத்தின் தேவையாகும் என்று ஆயர்கள் தங்கள் கருத்தை இந்த மாநாட்டில் மிக ஆழமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

_அருள்பணி வி.ஜான்சன் SdC

(Source from RVA English News)

Add new comment

5 + 3 =