'FABC 50 இறுதி ஆவணம்' இணையதளத்தில் வெளியிடப்பட்டது | வேரித்தாஸ் செய்திகள்


ஆசிய ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பு (FABC) பொது மாநாட்டு ஆவணம், 'ஆசிய மக்களாக இணைந்து பயணம்' என்ற தலைப்பில் மார்ச் 15 அன்று இந்திய நேரப்படி 16:00 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பு (FABC) அதன் முதல் பொது மாநாட்டை அக்டோபர் 12-30, 2022 இல் பாங்காக்கில் உள்ள பான் ப்ஹு வான் மேய்ப்பு நிலையத்தில் நடத்தியது, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

பொது மாநாட்டின் இறுதி ஆவணம் மார்ச் 15 அன்று வெளியிடப்பட்டது . இந்த  40 பக்க ஆவணம் 5 பகுதிகளைக் கொண்டுள்ளது; ஒன்றாகப் பயணம் செய்தல், ஆசியாவின் வளர்ந்து வரும் யதார்த்தங்களைப் அணுகுவது , ஆசிய திருஅவைக்கு தூய ஆவியார் என்ன சொல்கிறார் என்பதைக் கண்டறிதல், ஆசிய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் போன்ற நமது கொடைகளை  வழங்குதல் மற்றும் புதிய பாதைகளை அமைப்பது தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டது.

பகுதி ஒன்று: ஒன்றாகப் பயணம் செய்வது  கூட்டு ஒருங்கிய  அழைப்புக்கு பதிலளிப்பதாகும். இது ஒரு கூட்டு  திருஅவையின்  மூன்று அத்தியாவசிய கூறுகளைப் பற்றி பேசுகிறது: ஒற்றுமை, பங்கேற்பு மற்றும் பணியாற்றுதல் என்பது இதன் முக்கிய செயல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகுதி இரண்டு: ஆசியாவின் வளர்ந்து வரும் யதார்த்தங்களைப் பார்ப்பது, ஆசியாவில் திருச்சபை எதிர்கொள்ளும் சவால்களை விரிவாகக் காட்டுகிறது. மேலும் இதன் முக்கிய உண்மைகளுக்கு இந்தப் பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது:

1. புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் பழங்குடியின மக்கள், பெரும்பாலும் தங்கள் தாயகங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் 
2. குடும்பங்கள், சமூகத்தின் அடித்தளம்
3. திருஅவை  மற்றும் சமூகம் எதிர்கொள்ளும் பாலின பிரச்சினைகள்
4. வேகமாக மாறிவரும் ஆசிய சமூகங்களில் பெண்களின் பங்கு
5. ஒரு புதிய உலகத்தை எதிர்கொள்ளும் இளைஞர்கள்
6. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கம்
7. நகரமயமாக்கல் மற்றும் உலகமயமாக்களுக்கு  சமமான பொருளாதாரத்தை மேம்படுத்துதல்
8. நமது பொதுவான சமூகத்திற்கு  ஆபத்தை விளைவிக்கும் காலநிலை நெருக்கடி
9. ஆசிய கண்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்காக மதங்களுக்கு இடையிலான உரையாடல்

பகுதி மூன்று: ஆசியாவில் உள்ள திருஅவைக்கு  தூய ஆவியானவர் என்ன சொல்கிறார் என்பதைப் பகுத்தறிதல்:

1. புலம்பெயர்ந்தோர், அகதிகள், பழங்குடியின மக்களுடன் பயணம் செய்தல் 
2. குடும்பத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த,
3. பாலின பிரச்சனைகளுக்கு தீர்வு காண,
4. ஆசிய திருஅவையில்  பெண்களுக்கு புதிய தலைமைப் பொறுப்புகளை  உருவாக்குதல் 
5. இளைஞர்களுக்கு ஊழியம் செய்ய,
6. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதை ஊக்குவிக்க,
7. நகரமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலின் சூழலில் உள்ளடக்கிய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்துதல்,
8. நாம் வாழும் சமுதாயத்தை  பராமரிப்பதற்கு,
9. ஆசியாவில் உரையாடல் மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான பாதைகளை உருவாக்கி உறவுப் பாலங்களை உருவாக்கும் கருவியாக மாறுதல் 
10. ஆசிய சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப நமது குருக்களின்  உருவாக்கத்தை மாற்றியமைக்க,

பகுதி நான்கு: நமது கொடைகளை  வழங்குதல், ஆசிய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் பற்றி கூறுகிறது

பகுதி ஐந்து: புதிய பாதைகளைத் திறப்பது மாற்றத்திற்கான பாதையை அமைக்கிறது:

1. ஆதிக்கம் செலுத்துவது முதல் உள்ளார்ந்த நற்செய்தி பறைசாற்றுதல் வரை
2. அடிப்படை கிறிஸ்தவ சமூகங்கள் (பி.சி.சி.) முதல் அடிப்படை திருஅவை  சமூகங்கள் (பி.இ.சி.) வரை
3. உரையாடல் முதல் கூட்டுஒருங்கியக்கம் வரை
4. நற்செய்தி அறிவுப்பு  முதல் நற்செய்தி விளக்கம்  வரை
5. வெற்றி பாதையில் இருந்து புதிய மேய்ச்சல் பாதைக்கு முன்னுரிமைகள் அளிப்பது வரை.
'FABC 50 ஆவணம்' புத்தக வெளியீடு  மார்ச் 15 அன்று 18:30 (மணிலா நேரம்), 17:30 (பாங்காக் நேரம்) மற்றும் 16:00 (இந்திய நேரப்படி) நடைபெற்றது.

-அருள்பணி வி. ஜான்சன்

(Translated from RVA English News )

Add new comment

4 + 5 =