Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
112 வருடங்களுக்கு பின்பு அதே வீட்டுக்கு வந்த அஞ்சலட்டை ஆனால் அதே வீடல்ல !?!
112 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் தன்னுடைய வீட்டிற்கு வந்ததால் அதனை பார்த்த பிரித்தானிய பெண் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேலேஞ்சலோ வெபர் (24), என்பவரின் வீட்டு முகவரிக்கு ஒரு அஞ்சல் அட்டை வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்தபோது 112 வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து கூறுகையில், அன்றைய தினம் என்னுடைய கணவர் கையில் ஓர் அஞ்சல் அட்டையுடன் வீட்டிற்கு வந்தார். அதிலிருந்து புகைப்படத்தை பார்த்த பொழுது என்னால் நம்ப முடியவில்லை. அந்த வீட்டின் முன் பேய் இருப்பதாக நினைத்தேன். என்னுடைய அம்மாவும் அந்த படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
நான் 2011 ஆம் ஆண்டு முதல் இந்த வீட்டில் இருக்கிறேன், ஆனால் 1907 ஆம் ஆண்டு ராபர்ட் என்பவர் எழுதிய கடிதம் தற்பொழுது எதற்காக என்னுடைய வீட்டிற்கு வந்துள்ளது என்பது பற்றி ஆராய ஆரம்பித்தோம். அப்போதுதான்நாங்கள் இருக்கும் வீட்டு முகவரியில் 1990 ஆம் ஆண்டில் வில்ட்ஷயர் என்கின்ற பெண்மணி வசித்து இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டின் முன் நின்று கொண்டு இருப்பதும் அவர் தான் என்பதை தெரிந்து கொண்டேன்.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்தினம் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், அன்புள்ள வில்... செவ்வாய்க்கிழமை நான் வரவில்லை என்றால் ஏமாற்றம் அடையாதே, எனக்கு உடல்நிலை சரியில்லை, எல்லாம் நல்லதாக நடக்கும் என நம்புகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை நாங்கள் தற்பொழுது பத்திரமாக வைத்து இருக்கின்றோம். விரைவில் அவரை கண்டுபிடித்து இதனை ஒப்படைப்போம் என கூறியுள்ளார்.
Add new comment