நேபாளத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி


Bomb blast in Nepal capital. PC: Pakistan Today

நேபாள தலைநகர் காத்மண்டுவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில், 4 பேர் பலியாகினர்.

நேபாள தலைநகரான காத்மண்டுவில், அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நேபாள இராணுவம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். எனினும் எந்த இயக்கமும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை.

(Thinaboomi - மே 28, 2019)

Add new comment

18 + 1 =