ஆமைகளை வேட்டையாடி உண்ணும் சிம்பன்சி வகை குரங்குகள்


Chimps spotted cracking open tortoises' shells and eating. PC: Sky News

முதல்முறையாக சிம்பன்சி வகை குரங்குகள் ஆமைகளை வேட்டையாடி உண்ணும் அபூர்வ நிகழ்வு ஒன்று படம்பிடிக்கப்படுகின்றன. 1960களில் துவக்கம் வரை சிம்பன்சிகள் பழங்கள், கொட்டைகள், பூக்கள் மற்றும் இலைகளை மட்டுமே உண்ணும் என கருதப்பட்டது. ஆனால் மனித இனத்துக்கு நெருக்கமானது என கருதப்படும் சிம்பன்சிகள் மனிதனைப் போலவே அனைத்துண்ணிகளாக  இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

டாக்டர் ஜெனெ காட்டள் என்னும் குரங்கியல் ஆய்வாளர் ஒருவர்தான் முதன்முதலில் குரங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடுவதை கண்டறிந்தார். அதுபோல் குரங்குகள் வேட்டையாட கருவிகளை  பயன்படுத்துவதையும் அவர்தான் முதலில் கண்டறிந்தார்.

ஜெர்மனியை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் கோபென் என்ற பகுதியில் இரண்டாண்டுகள்  நடத்திய ஆய்வின் பொழுது சிம்பன்சிகள் ஆமைகளை வேட்டையாடுவதை படம் பிடித்தார். ஆமைகளை பிடிக்கும் சிம்பன்சிகள், அவற்றின் ஓடு கடினமாக இருப்பதால், ஆமைகளை மரத்தில் மோதி அடித்து உடைத்து, அதனுள் இருக்கும் இறைச்சியை உண்பதை வெளியாகியுள்ள காணொளியில் காணலாம்.

அத்துடன் இன்னொரு முக்கிய செயலும் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஆமைகளை கண்டுபிடிக்கும் போது அவற்றின் இறைச்சியை எதிர்காலத் தேவைக்காக சிம்பன்சிகள் சேமித்து வைப்பதும் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

இதில் என்ன முக்கியத்துவம் என்றால், உணவை எதிர்காலத்திற்கு சேமித்து வைத்து பின் தேடி வரும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் குணம் மனிதர்கள் மட்டுமே காணப்படுவதாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டதுதான்.

(Lanka Sri - மே  27, 2019)

Add new comment

4 + 0 =