Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வெளிப்படைத்தன்மையில் வளர்ந்துள்ள வத்திக்கான் நிதித்துறை
வத்திக்கான் நாட்டின் நிதித்துறை நிலைமை குறித்த 2018 ஆம் ஆண்டின் அறிக்கையை, AIF என்றழைக்கப்படும் அதிகாரப்பூர்வ அமைப்பின் தலைவர், திருவாளர் René Brülhart அவர்கள், மே 21, இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
வத்திக்கான் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிமாற்றங்களிலும் வெளிப்படைத்தன்மை அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள இந்த அறிக்கை, 2017 ஆம் ஆண்டு, 150 விவகாரங்களில் தெளிவான பரிமாற்றங்கள் இல்லாத வேளையில், கடந்த ஆண்டு 56 விவகாரங்களில் மட்டும் தெளிவற்ற நிலை இருந்ததென்று Brülhart அவர்கள் கூறினார்.
AIF அமைப்பு, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களால், 2010 ஆம் ஆண்டு, டிசம்பர் 30 ஆம் தேதி, உருவாக்கப்பட்டது என்பதும், இவ்வமைப்பின் சீர்திருத்தங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2013 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் வெளியிட்ட Motu Proprio வழியே நடைமுறைக்குக் கொணர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கன.
இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகள் உட்பட, 57 நாடுகளுடன், வத்திக்கான் நாட்டின் நிதித்துறை AIF, MOU எனப்படும் ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது.
(வத்திக்கான் செய்தி - மே 23, 2019)
Add new comment