சாகச குட்டி யானை மரணம் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்


A painful cry of Dumbo. PC: MTL blog

தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு வித்தை காட்டிய 3வயது டும்போ எனும் குட்டி யானை தவறி விழுந்ததில் இரு பின்னங்கால்களும் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் யானைகளை வைத்து வித்தை காட்டுவது வழக்கம். இதில் மூன்று வயதான குட்டி ஆண் யானை தலைகீழாக நின்று சுற்றுலா பயணிகளிடம் ஆதரவை பெருமளவில் பெற்று வந்தது. இந்நிலையில் சாகச நிகழ்ச்சியின்போது டும்போ விழுந்ததில் பின்னங் கால்கள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மூன்று நாட்களுக்குப்பின் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.   

(லங்கா ஸ்ரீ - மே 20, 2019)

Add new comment

1 + 11 =