சுவிட்சர்லாந்து குப்பை போடுபவர்களுக்கு கடும் அபராதம்


An image of rubbish trash

சுவிட்சர்லாந்து மாகாணம் ஒன்று குப்பை போடுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.  சுவிட்சர்லாந்து மாகாணமாகிய ஆர்குயாவில்
குப்பை போடுபவர்களுக்கு 300 பிராங்குகள் வரை அபராதம் விதிக்க அம்மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தற்போது இம் மாகாணத்தின் பல நகராட்சிகள் குப்பை போடுபவர்களுக்கு 40 முதல் 100 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கின்றனர். இந்த அபராதத்தை கடுமையாக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. ஆர்குயாவில் அதிகபட்ச அபராதம் 300 பிராங்குகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது பெரும்பாலான கட்சிகள் இந்த அபராதத்தை வரவேற்றுள்ளன. FDP மட்டுமே இந்த முடிவை எதிர்த்துள்ளது.   புதிய அபராதம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது. 
 

Add new comment

7 + 5 =