நாய்க்கு பெயர்- உரிமையாளர் கைது


Image of the man named dogs. PC. NextShark

சீனாவில் சட்டத்திற்குப் புறம்பான பெயர்களை நாய்க்கு வைத்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது. சீனாவில் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த பேன் என்கின்ற 30 வயதான இளைஞன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இரு நாய்களுக்கு Chengguan, Xieguan என பெயர் வைத்துள்ளார். இதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவானது காவல் துறையின் கவனத்திற்கு செல்லவே உடனடியாக விசாரணை மேற்கொண்டு காவல்துறை இந்த இளைஞனை கைது செய்தது.

சீனாவில் இந்த பெயர்களுக்கு  நகர்ப்புறங்களில் சிறிய குற்றங்களை கண்காணிப்பவர்களையும், போக்குவரத்து அதிகாரிகள் போன்றவர்களையும் குறிக்கும் பொருள் கொண்ட பெயர்கள் ஆகும். நாய்களுக்கு இப்படி பெயர் வைத்து சட்ட அமலாக்க அதிகாரிகளை அவமானப்படுத்தியதால் தற்பொழுது இந்த இளைஞருக்கு 10 நாட்களுக்கு சிறப்பு காவல் விதிக்கப்படுகின்றது. இதுகுறித்து அந்த இளைஞன் 'இது எனக்கு சட்டவிரோதமானது என்பது தெரியாது, நான் விளையாட்டுக்காகத்தான் எப்படி வைத்தேன்' என்று கூறி இருக்கின்றார்.(Lanka sri)

 

Add new comment

10 + 0 =