குடும்பங்களை ஊக்கப்படுத்தும் திருத்தந்தை


Pope Francis blessing a family

மே 15, இப்புதனன்று, குடும்பங்களின் உலக நாள் கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"ஒவ்வொரு தனி மனிதருக்கும், படைப்பு அனைத்திற்கும் வழங்கப்படும் அக்கறை, குடும்பத்தின் முன்னேற்றம் என்ற கருத்தை வளர்ப்பதன் பொருள்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

மேலும், இரண்டாம் ஜான்பால் பாப்பிறை நிறுவனம், குடும்பங்களை மையப்படுத்தி, மே 13 இத்திங்கள் முதல், 15 இப்புதன் முடிய உரோம் நகரில் முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர் தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார்.

மே 15, இப்புதனன்று குடும்பங்களின் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையும், குடும்பங்கள் மற்றும் படைப்பின் பாதுகாப்பு என்பது, இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட உலக நாளுக்கு, மையப்பொருளாக அமைந்தது என்பதையும், திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.

(வத்திக்கான் செய்தி)

Add new comment

1 + 0 =