ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை


An image of Mena Mangal Afghan journalist

ஆப்கானிஸ்தானில் உயிருக்கு ஆபத்து எனக் கூறிய  பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பெண் பத்திரிக்கையாளர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் அரசியல் ஆலோசகராக செயல்படும் பெண் பத்திரிகையாளர் மேனா மங்கள் பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய பேஸ்புக் முகநூல் பக்கத்தில் புத்தகத்தில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் காபுலில் உள்ள தன்னுடைய அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த மேனா மங்கள் பட்டப்பகலில் பொதுவெளியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஸ்ரட் ரஹீமி  கூறுகையில், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர், இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தனி ஒரு நபர் அல்லது பயங்கரவாதியா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Add new comment

4 + 4 =