குடும்பங்கள் உலக நாள் மே 15


ரோமா குடும்பத்தைச் சந்திக்கின்றார் திருத்தந்தை (Vatican Media)

உலகளாவிய வளர்ச்சித் திட்டங்களில் குடும்பங்களின் பங்கை வலியுறுத்தி, மே 15, இப்புதனன்று, குடும்பங்கள் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

கல்வியின் தரத்தை உயர்த்துதல், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதில், மனிதர் மற்றும் நிறுவனங்களின் பங்கு குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல் போன்றவை, இவ்வாண்டு குடும்பங்கள் உலக நாளில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என, ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“குடும்பங்கள் மற்றும், காலநிலை மாற்றத்திற்கு நடவடிக்கை: ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்கு எண் 13” என்ற தலைப்பில், மே 15, இப்புதனன்று, குடும்பங்கள் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

உலகளாவிய சமுதாயம், குடும்பங்களுடன் கொண்டிருக்க வேண்டிய உறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில், 1993 ஆம் ஆண்டு, ஐ.நா. பொது அவை, குடும்பங்கள் உலக நாளை உருவாக்கி, அந்நாள், ஒவ்வோர் ஆண்டும் மே 15 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்தது. 

(வத்திக்கான் செய்தி - 15 மே 2019)

Add new comment

1 + 6 =