Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக ஊடக சுதந்திர நாள் மே 3
‘உறவுகளும், சனநாயகமும்’ என்ற தலைப்பில், மே 3, வருகிற வெள்ளியன்று, உலக ஊடகச் சுதந்திர நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, எத்தியோப்பிய அரசு, ஆப்ரிக்க ஒன்றியம் ஆகிய மூன்றும் இணைந்து, மே 1, இப்புதன் முதல், வருகிற வெள்ளி வரை, ஊடகச் சுதந்திரத்தின் உலக நாள் நிகழ்வுகளை, எத்தியோப்பியாவின் Addis Ababa நகரில் நடத்தவுள்ளன.
பெண் ஊடகவியலாளர்கள் இணையத்தில் துன்புறுத்தப்படுவது, ஊடகங்கள், ஆப்ரிக்காவில் தேர்தல்கள், எத்தியோப்பியாவில் ஊடகச் சீர்திருத்தம் உட்பட, பல்வேறு தலைப்புகள், இந்நிகழ்வுகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில், ஊடகத் துறை, பல்கலைக்கழகங்கள், நீதித்துறை, தொழில் அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த உலக நாளில், உலகின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
1991 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ பொது அவையின் 26வது அமர்வில் பரிந்துரைசெய்யப்பட்டதன் அடிப்படையில், 1993 ஆம் ஆண்டு, ஐ.நா. பொது அவை, உலக ஊடக நாளை உருவாக்கியது.
(வத்திக்கான் செய்தி - 01 மே 2019)
Add new comment