Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பருவநிலை மாற்றம்- நாட்டில் அவசர நிலை பிரகடன படுத்திய ஸ்காட்லாந்து முதல்-மந்திரி
ஸ்காட்லாந்து முதல்-மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் இந்த அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்திருக்கிறார். உலகம் பருவநிலை மாற்றத்தில் அவசரநிலையை எதிர் கொண்டு இருக்கின்றது. இது நம்முடைய அன்றாட வாழ்வில் பார்க்க முடிகின்றது என்றும், அவருடைய கட்சியானது இந்த கரிமம் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவர நிறைவாக விரைந்து செயல்படும் என்றும் அறிவித்திருக்கின்றார்.
தொழில் கட்சி தலைவரான ஜெர்மி கார்பின்னும் இதே கருத்தை முன்னிறுத்த, முதல்-மந்திரி, புவிவெப்பமடைதல் மோசமடைந்து விட்டது என அறிவியல் காட்டியுள்ளதை குறித்து சுட்டிக்காட்டி இதனை உறுதி செய்தார்.
எடின்பரோவில் ஸ்காட்லாந்து நாட்டு கட்சியின் வசந்த மாநாட்டில் பிரிட்டன் நிபுணர் ஆலோசனை குழு அறிவித்த கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளை குறைக்கும் நடவடிக்கையை சுட்டிக் காட்டி அதனை தன் அரசு செயல்படுத்தும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
ஸ்காட்லாந்து பாராளுமன்றம் இந்த ஆண்டு மூன்று முறை அழிவு எதிர்ப்பாளர்களால் முற்றுகையிடப்பட்ட நிலையிலும், ஸ்காட்லாந்து பசுமை கட்சியினுடைய கொள்கைகளுக்கு எதிராக ஒரு சில கட்சிகள் சேர்ந்து வாக்களித்திருந்த நேரத்திலும், ஸ்காட்லாந்து முதன்மந்திரி இவ்வாறாக கூறியிருக்கின்றார்.
நான் சந்தித்த இளம் மக்களையும், அவர்களின்பொருட்டு அவர்களுடைய தலைமுறையினருக்கும் சேர்த்தார்போல நான் இந்த பகிரங்க வாக்குறுதியை அளிக்கின்றேன், அரசாங்கத்தின் ஆலோசனை குழு, முன்னேறுங்கள், வேகமாக செல்லுங்கள் என்று சொல்லுகின்ற பட்சத்திலே, அதை நாம் செயல்படுத்துவோம் எனவும், ஸ்காட்லாந்து இதற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் என்றும் கூறியிருக்கின்றார்,
ஏற்கனவே இங்கிலாந்தில் 12க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்கள் பருவநிலை காலநிலை அவசரநிலை அறிவித்திருக்கின்ற நேரத்தில் அவைகள் 2030 ஆம் ஆண்டுக்குள் கரிம உமிழ்வில்ல நிலையை எட்டுவதற்கு உத்தியை கொண்டிருக்கின்றன. சில பகுதிகள் மின்சாரத்தால் இயங்கும் மகிழ்வுந்துகளை அறிமுகப்படுத்தவும் இலக்கை வைத்திருக்கின்றன. கரியமில வாயு 1990 இல் எப்படி காற்றிலும் மற்ற இடத்திலும் இருந்ததோ அந்த அளவுக்கு குறைக்க 2050 ஆம் ஆண்டு வரை இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்காட்லாந்து 2050 ஆம் ஆண்டு கரிமம் இல்லா நிலையை எட்டுவதற்கு இலக்கு வைத்திருந்து தன்னை அர்ப்பணித்து இருக்கிறது.

Add new comment