தொடர் தேடுதல்கள், திட்டங்களை முறியடிக்குமா இலங்கை அரசு?


An image of Sri Lankan army.

ஈஸ்டர் நாளில் இலங்கையில் தமிழ் கிறிஸ்தவர்கள் மீது எதிர்பாராத நேரத்தில் தீவிரவாதத் தாக்குதல்  நடத்தியதால், நாடு பதற்றத்தில் உள்ளது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என அச்சத்தோடு மக்கள் இருக்கின்றனர். பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதலை துவங்கியிருக்கின்றனர். முக்கிய நகரங்கள் மற்றும் கேந்திரங்கள்  அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடக்கா வண்ணம் எல்லா இடத்திலும் பாதுகாப்பு விசாரணை மற்றும்  புலனாய்வு உச்சநிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. 

இதன்விளைவாக சந்தேகத்திற்கு இடமான இடத்தில் சாய்ந்தமருதில்  ஒரு வீட்டில் செய்த சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் வைத்து பார்க்கின்ற பொழுது இன்னும் அதிகமான தாக்குதல்களை பயங்கரவாதிகள் குறிவைத்து இருக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.

இந்த ஒரு சோதனையால் கைப்பற்றப்பட்டு பொருளால் அவர்களுடைய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது.  அதேபோன்று  வேறு எங்கும் இது போன்று இருக்கின்றதா என்று தொடர் தேடுதல்களை பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

இந்த தொடர் சோதனைகளின் வழியாக தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட அனைத்தும் அடுத்த தாக்குதலுக்கு ஆயத்த நிலையில் இருந்திருக்கின்றன. குறிப்பாக ட்ரோன்கள்,  படக்கருவிகள், தற்கொலை உடைகள், ரசாயனப் பொருட்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் மக்களின் ஒத்துழைப்புடனேயே இவையெல்லாம் சாத்தியப்படுகின்றன எனவும் அரசு கூறுகிறது. 

தேடுதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். மேலும் யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி கொண்ட வீடும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

Add new comment

9 + 5 =