மகனைக் கொன்றவனை மன்னித்த தாய்மை


A forgiving mother

அமெரிக்காவில் மகனை கொலை செய்த குற்றவாளியை மன்னித்து கட்டியணைக்க விரும்புவதாக தாய் ஒருவர் தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த வின்சென்ட் ரோட்ரிக்ஸ் என்கின்ற 23 வயது இளைஞன் கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று ஹாக்கின்ஸ் என்ற 17 வயது சிறுவனை சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2017 ஆம் ஆண்டு 50 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் குற்றவாளிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அப்போது குற்றவாளியை நோக்கி பேசிய ஹாக்கின்ஸ்ன் தாயார் நான் உன்னை மன்னிக்க வேண்டும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் உன்னை மன்னித்துவிட்டேன். ஒரு தாயாக நீ எனக்கு ஒரு குழந்தை, என் இதயத்தில் உன் மேல் எந்த கோபமும் கசப்போ எனக்கு இல்லை. ஒரு அம்மாவாக நான் உன்னை கட்டி அணைக்க விரும்புகிறேன், என் கண் கலங்கியபடியே பேசியுள்ளார். இதன் பிறகு கலக்கத்துடன் பேசிய குற்றவாளி நான்உன்னிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் ஹாக்கிங்ஸ்என பதிலளித்துள்ளார்.

Add new comment

7 + 7 =