இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 310 பேர் பலி 500 பேர் காயம் மற்றும் 38 பேர் கைது


church officials visiting the painful incident of the faithful.

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும்,    மூன்று பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழும்,  9 பேர் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 6 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒன்பது பேரும்  ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து அரச நிறுவனங்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு தினத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அலுவலக நேரம் தொடங்கும்பொழுது  மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

(Lanka Sri news)
 

Add new comment

3 + 5 =