29 ஜெர்மானியர்கள் உயிரிழப்பு சோகத்தில் அமைச்சர்...


Image of bus accident where 9 died in Portugal

போர்ச்சுக்களின்  வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ராவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 29 ஜெர்மன் சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடற்கரை நகரமான கனிகோவில் உள்ள மலைப் பகுதியில் இருந்து பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஜெர்மனியில் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் போர்ச்சுகல் நாட்டிற்கு சென்று விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், உயிர் பிழைத்தவர்களை ஜெர்மனிக்கு கொண்டு வரவும் அவரது குழு முழு வேளையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மருத்துவர்கள், உளவியலாளர்கள் ஆகியோருடன் போர்ச்சுக்கல்  நாட்டிற்கு பயணித்த அமைச்சர், அந்நாட்டு தூதரகத்திடம் கலந்துரையாடினார்.

இந்த விபத்து ஒரு பயங்கரமான சம்பவம். இங்கு விபத்து நடந்து இருக்கையில் ஜெர்மன் நாட்டில் என்னால் நிம்மதியாக உயிர்ப்பு விழாவை கொண்டாட முடியவில்லை என்று கூறினார்.

மேலும் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்ட அமைச்சர், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Add new comment

3 + 5 =