சிலி நாட்டில் விமான விபத்து அனைவரும் பலியான சோகம்...


An image of burning house after a flight crash on it

சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். சிலி நாட்டின் லேஸ் லாகோஸ் பிராந்தியத்தில் உள்ள பியூர்டோ மோண்ட்  என்ற இடத்தில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த விமானத்தில் ஒரு விமானியும் 2 பெண்கள் உட்பட 5 பயணிகளும் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சில நொடிகளில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. 

பின்னர் அந்த விமானம் ஒரு வீட்டின் மேல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானத்தின் எரிபொருள் கசிந்து தீ பிடித்தது, இதில் விமானம் மற்றும் அந்த வீடு முற்றிலும் எரிந்து.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நேரடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Add new comment

11 + 6 =