Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நிக்கராகுவாவில் பேச்சுவார்த்தைகளின் கனிகள் வெளிப்படட்டும் - திருஅவை எதிர்பார்ப்பு
நிக்கராகுவா நாட்டில் இந்தப் புனித வாரத்தில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதும், அரசியல் கருத்துப் பரிமாற்றங்களின் கனிகள் வெளிக்கொணரப்படுவதும் இடம்பெறும் என நம்புவதாக அந்நாட்டு கர்தினால் Leopoldo Brenes அவர்கள் கூறினார்.
குருத்து ஞாயிறு ஊர்வலத்திற்குப்பின் El Nuevo Diario என்ற நாளிதழுக்குப் பேட்டியளித்த கர்தினால் Brenes அவர்கள், உரையாடலின் கனிகள் வெளிக்கொணரப்படட்டும் என்றார்.
இந்தப் புனித வாரத்தில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு, அவர்களின் குடும்பங்களுடன் இணைய அனுமதிப்பது, நல்மனதின் வெளிப்பாடாக இருக்கும் என்ற ஆவலை வெளியிட்டார் கர்தினால் Brenes.
துன்புறும் ஒவ்வோர் அன்னையிலும், சிறைக் கைதிகளிலும், இயேசு இருக்கிறார் என்று கூறிய கர்தினால் Brenes அவர்கள், துன்புறும் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் அவரே தருகிறார் எனவும் எடுத்துரைத்தார்.
உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இந்தப் புனித வாரத்தை, குறிப்பாக புனித வெள்ளியை செபத்திலும், மௌனத்திலும் செலவிடுவோம் என மேலும் கேட்டுக்கொண்டார் கர்தினால் Brenes.
(வத்திக்கான் செய்தி)
Add new comment