தற்கொலை கரும்புள்ளி இருந்தும் உலகில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடு! ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை!


An image of Finland people happy

உலகில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகளில் பின்லாந்து இந்த ஆண்டு முதல் இடத்தை தக்க வைத்துள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் வாழ்க்கை சூழல், சமூக ஒருங்கிணைப்பு, சராசரி வாழ்நாள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடு எது என்பதை கணக்கிட்டு வருகிறது. இந்த வகையில் 2019 நடப்பு ஆண்டிலும் உலக அளவில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து இருப்பதாக அறிவித்தது. 

சர்வதேச அளவில் தற்கொலை சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வில் ஹங்கேரிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பின்லாந்து உள்ளது. 1990 ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அந்த நாடு முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பின்லாந்துக்கு பாதகமான அம்சங்களாக தற்கொலை விகிதம், கடுமையான நீண்ட குளிர் மற்றும் காலநிலை போன்றவைகள் இருந்தாலும், உலகின் எந்த மூளையில் திடீரென மன சோர்வு ஏற்பட்டால் தற்கொலை அபாயம் எல்லாருக்கும் பொதுவானது என்பதால் பின்லாந்தை மட்டும் குறை கூறக்கூடாது என அந்த நாட்டின் தேசிய சுகாதார மையத்தின் பேராசிரியர் டிமோ பர்டோனன் கூறியுள்ளார்.

கடந்த 1990 ஆம் ஆண்டுடன் கணக்கிடும் பொழுது தற்போது பின்லாந்தின் தற்கொலை எண்ணிக்கை பாதிக்கும் கீழாக குறைந்துள்ளதாகவும்,  குறிப்பாக ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் அவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தற்போது மிகவும் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் அதிக தற்கொலை விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பின்லாந்து இருபத்தி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Add new comment

3 + 13 =