குருத்தோலை ஞாயிறு திருவழிபாடு, ஏப்ரல் 14


புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், குருத்தோலை பவனியில், திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் AFP

ஏப்ரல் 14, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், குருத்தோலை திருப்பவனியையும், ஆண்டவரின் திருப்பாடுகள் திருப்பலியையும் நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், பகல் 12 மணிக்கு, மூவேளை செப உரையும் நிகழ்த்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்குருத்தோலை ஞாயிறன்று, 34வது உலக இளையோர் நாள், உலகளாவியத் திருஅவையில், மறைமாவட்ட அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 14 ஆம் தேதியன்று, இராணுவச் செலவை எதிர்க்கும் உலக நாளும் கடைப்பிடிக்கப்படுகின்றது. Stockholm உலக அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகில் இராணுவத்திற்கென 1.7 டிரில்லியன் டாலர் செலவழிக்கப்படுகின்றது எனத் தெரிகின்றது.

ஆசியா மற்றும் ஓசியானியா பகுதியில் சீனாவும், மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவும் இதில் முன்னணியில் உள்ளன. இரஷ்யாவில் இந்நிலை குறைந்திருப்பதாகவும், அதேநேரம், மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அதிகரித்திருப்பதாகவும், Stockholm ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. 

(வத்திக்கான் செய்தி)

Add new comment

3 + 6 =