ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் பெண்களின் பங்கு அதிகரிப்பு


Nepal police in UN peace mission

"நீ அமைதியை விரும்பினால் நீதியைப் உறுதியாக நிலைநாட்டு" என்ற விருதுவாக்குடன், 1919ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தொழிலாளரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ILO உலக தொழில் அமைப்பு உருவாக்கப்பட்டது.

நெருக்கடியான சூழல்களில் நம்பிக்கையை உருவாக்கி, ஒப்புரவுக்குரிய நல் கருத்துக்களை வழங்கி, அதனை ஊக்குவிப்பதில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பதாலும், இப்பெண்கள் பெரும்பாலும் மதம் சார்ந்தவர்கள் என்பதாலும், சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றும் பணி ஓரங்கட்டப்படக் கூடாது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், " ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகள் - அமைதிகாக்கும் பணியில் பெண்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், ஏப்ரல் 11, இவ்வியாழனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

உலகில், ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகள் இடம்பெறும் இடங்களில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகின்றது என்றும், இவர்கள் தங்கள் கடமையை ஆற்றுவதுடன், பணியாற்றும் இடங்களிலுள்ள மக்களின் உண்மையான தேவைகளை உணர்ந்து பணியாற்றுகின்றனர் என்றும், பேராயர் அவுசா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

போர் இடம்பெறும் இடங்கள் மற்றும் போரின் கொடுமையை அனுபவித்த இடங்களில் ஒப்புரவை உருவாக்குவதில் பெண்களின் தலைமைத்துவம் குறிப்பிடும்படியானது என்றும் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், அப்பெண்களுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா.வின் உலக தொழில் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவு நிகழ்வு சிறப்பிக்கப்பட்ட ஐ.நா. பொது அவை அமர்விலும், பேராயர் அவுசா அவர்கள், ஏப்ரல் 11, இவ்வியாழனன்று உரையாற்றினார்.. (வத்திக்கான் செய்தி)

Add new comment

9 + 3 =