சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் பாடசாலை குழந்தைகள் பலி


A file image of explaining the attack . image from truthout.org

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.

 ஏமன் தலைநகர் சனாவில் பாடசாலை அருகே சவுதி கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது.

 இதில் குழந்தைகள் பலர் பலியாயினர், பொதுமக்கள் 54 பேர் படுகாயமடைந்தனர்.

 பலியானவர்களில் பலரும் 9 வயது மாணவர்கள்.
 இன்னும் பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஜனவரி மாதத்திலிருந்து  நடந்த வான்வழி தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஐதீகம் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இவர்களிடையே  15 மார்ச் முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது.

 இதில் ஜனாதிபதி மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. ஹவுதிக்கு  ஈரான் ஆதரவு அளிக்கிறது.

 சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது.

அரசுடன் இணைந்து சவுதி நடத்தும்  மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்துள்ளது.

 இப்போரில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5000 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

2 + 2 =