Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது. லண்டனில் பரபரப்பு
விக்கிலீக்ஸ் நிறுவனர் மீது பிரித்தானிய போலீசார் அதிரடி நடவடிக்கை.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு கள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈக்குவேடார் அரசு அவருக்கு வழங்கிய ஏழு ஆண்டுகள் அடைக்கலத்தை ரத்து செய்ததை தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அசாஞ்சே விரைவில் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார் என்று லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அசாஞ்சேவை லண்டன் போலீசார் இழுத்துச் செல்லும் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை குறிப்பிட்டு எட்வர்ட் ஸ்னோடென், ஈக்வடார் நாட்டு தூதரக அதிகாரிகள் தூதரகத்துக்குள் நுழைந்து விருது பெற்ற ஒரு பத்திரிகையாளரை எடுத்துச் செல்ல லண்டன் ரகசிய போலீசார் வலை விரித்துள்ளனர்.
அவரை விமர்சிப்பவர்கள் வேண்டுமானால் இதை கண்டு மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இதை பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான தருணம் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த ஸ்னோடென். சில நாடுகளின் அரசு செயல்பாடுகளையும் சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருவதை அவர் உலகிற்கு பகிரங்கப்படுத்தினார்.
இதன் காரணமாக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எட்வர்ட் ஸ்நோடன் அதனை தொடர்ந்து ரஷ்யாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Add new comment