Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இப்படியும் சாத்தியமா மருத்துவ உலகில் அதிர்ச்சி
அமெரிக்காவில் இறந்து போன 99 வயது மூதாட்டியின் உடலை உடற்கூறு செய்து பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரேகான் ஐ சேர்ந்த ரோஸ் மேரி என்ற மூதாட்டி, 2017 ஆம் ஆண்டு தனது 99வது வயதில் இறந்து போனார்.
அவர் இறந்த பின்னர் அவரது உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒரேகான் ஆரோக்கியம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் உடற்கூறு ஆராய்ச்சி செய்தபோது, அவரது உடல் பாகங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளான வயிறு, கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல் என அனைத்து உறுப்புகளும் வலதுபுறம் இருப்பதற்கு பதிலாக இடதுபக்கமாக இருந்துள்ளது.
ரோஸ்மேரி சிடூஸ் இன்வெர்சூஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
உடல் இயக்கத்திற்கு தேவையான அனைத்து உறுப்புகளும் இடம் மாறி இருந்தும் 99 ஆண்டுகள் எந்த வித உடல்நல பிரச்சனைகள் ஏதும் இன்றி உயிர் வாழ்ந்துள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவரது உடலை உடற்கூறு செய்து பார்த்ததில் புது அனுபவம் கிடைத்தது என கூறுகின்றனர்.
இது போன்ற உறுப்புகள் இடம் மாறி இருந்தால் கண்டிப்பாக இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் இதயம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இடதுபுறமாக இருந்தது.
5 கோடி பேரில் ஒருவருக்கே இது போன்ற உள்ளுறுப்புகள் இடம் மாறி இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரோஸ்மேரின் குடும்பத்தார் கூறியதாவது. மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட அவரது உடலில் இருந்து மூன்று உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. ஆனால் குடல் வால்வு பகுதி மட்டுமே இடம் மாறி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது தவிர, வேறு எந்தவித உறுப்பு இட மாற்றங்கள் குறித்து அவர் உயிரோடு இருந்த போது எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர்.
Add new comment