Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
என்ன பறக்கும் தட்டுகளா !?!
நடுவானில் விமானத்தில் துரத்திய பறக்கும் தட்டுகள்... அதிர்ச்சியடைந்த பயணி. தென் கொரியாவில் இருந்து தாய்லாந்து சென்ற விமானத்திற்கு அருகே 6 பாகங்களாக பிரிந்து பறக்கும் தட்டு ஒன்று சென்றுள்ள காணொளி காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தென்கொரியாவை சேர்ந்த லூகாஸ் கிம் என்பவர் தன்னுடைய வீட்டில் இருந்து தாய்லாந்திற்கு ஜேஜூ விமானம் மூலம் பயணித்திருக்கிறார். நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது மஞ்சள் ஒளியுடன் பசுமையான ஒரு துடிப்புடன் ஜன்னல் வழியே ஒரு பொருளை கண்டுள்ளார்.
ஆரம்பத்தில் அது ஒரு விமானமாக இருக்கலாம் என நினைத்துள்ளார்.
ஒரு விமானத்திற்கு அருகாமையில் மற்றொரு விமானத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று என்பதால் அவர் தன்னுடைய அலைபேசியில் அதை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார். ஆனால் அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பறக்கும் பொருளானது ஆறு பாகங்களாக நடுவானில் பிரிந்துள்ளது.
இந்த காணொளியை பார்த்து இணையதள வாசிகள், ஒருவேளை சூரிய ஒளியின் வெளிச்சம் மற்றும் சாளரங்களை பிரதிபலிப்பதாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, உலகம் முழுவதும் ஆராய்வதற்கு தான் கடவுள் கொடுத்திருக்கிறார், மற்ற கிரகங்களில் வேறு விலங்குகள் இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.

Add new comment