வீட்டிற்கு தெரியாமல் 47 குழந்தைகளுக்கு தந்தையான கணவர், அதிர்ச்சியில் மனைவி


a frame for a Dad

வீட்டிற்கு தெரியாமல் 47 குழந்தைகளுக்கு தந்தையான கணவர் அதிர்ச்சியில் மனைவி 

பிரித்தானியாவில், தனக்கு தெரியாமல் 47 குழந்தைகளுக்கு கணவர் தந்தையாக இருப்பதை அறிந்த மனைவி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.

 அமெரிக்க இணையதளமான ரெடிக்   தளத்தில், 
பொதுமக்கள் பலரும் தங்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் மற்றும் கேள்விகளை பதிவிடுவார்கள். அதனை பார்க்கும் பொதுமக்கள் யோசனைகள் அறிவுரைகளை வழங்குவார்கள்.

இந்த வகையில்  fedupwife 1234  என்கின்ற பயனாளர் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அவருடைய 47 வயது கணவருடன் 8 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து இருக்கிறார். அவருக்கு தற்பொழுது ஒரு குழந்தை இருக்கிறது.

 திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் நடந்த சந்திப்பின் பொழுது விந்தணுக்களை தானம் செய்து இருப்பதாக அவருடைய கணவர் கூறியிருக்கிறார்.

 இரண்டு அல்லது நான்கு குழந்தைகள் தான் பிறந்திருக்கலாம் என அவருடைய மனைவியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 இந்நிலையில் விந்தணு தானம் மூலம் இதுவரை எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன என்று கேட்டுள்ளார்.

 கடைசியாக கருத்தரிப்பு மையத்தில் கேட்டபடி 47 குழந்தைகள் என கணவர் கூறியுள்ளார்.

   இதனை கேட்டதும் அவருடைய மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரித்தானிய சட்டப்படி குழந்தை 18 வயதை அடைந்ததும் குழந்தையின் உயிரியல் தந்தை யார் என்ற விவரத்தை தெரியப்படுத்த வேண்டும்.

 ஒருவேளை அவருடைய குழந்தைகள் எதிர்காலத்தில் தேடி வந்தால் நான் என்ன செய்வது என குழம்பி, விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

 இந்த  கேள்விக்கு ஆயிரத்திற்கும் அதிகமான பதிலளித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்த விவகாரத்தில் அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளனர்.

Add new comment

3 + 4 =