பரபரப்பான சூழலில் இஸ்ரேலின் ஐந்தாவது முறை பிரதமராகும் பெஞ்சமின் நெதன்யாகு


Israel Prime Minister, image from AFP

பரபரப்பான சூழலில் இஸ்ரேலின் ஐந்தாவது முறை பிரதமராகும் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக உள்ளார்.

 கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நாட்டில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.

 இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

 முன்னாள் ராணுவ தலைவரான பென்னி புளூ மற்றும் வெள்ளை கூட்டணி மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவியது.
 ஆனால் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

 எனினும் நெதன்யாகுவின் கட்சிக்கு வலதுசாரிகளும், மதம் சார்ந்த பின்னணி கொண்ட கட்சிகளும் ஆதரவு அளித்த நிலையில்,

மொத்தமுள்ள 120 இடங்களில் 65 இடங்களில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

 இதன் மூலம் பென்ஜமின் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதிலும் அவர் ஐந்தாவது முறையாக பதவி ஏற்பதால், இஸ்ரேலின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 இந்நிலையில் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில்  நான் அனைத்து மத மக்களின் பிரதமராக இருப்பேன் என  தெரிவித்துள்ளார்.
 

Add new comment

7 + 1 =