Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
முதன்முறையாக கருந்துளை புகைப்படத்தை வெளியிட்ட நாசா
முதன்முறையாக கருந்துளை புகைப்படத்தை வெளியிட்ட நாசா
உலக மக்கள் எதிர்பார்ப்பு
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக கருந்துளையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு கருந்துளை, M87 என அழைக்கப்படும் அண்டத்தில் உள்ளது.
இ எச் டி தொலைநோக்கி திட்டம் 2012 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
கருந்துளை பற்றிய தகவல்கள் சேகரிக்கவும் அதை சுற்றியுள்ள சூழலை கண்காணிக்கவும் எது கொண்டுவரப்பட்டது.
ஒவ்வொரு அண்டத்தில் நடுவிலும் ஒரு மிகப்பெரிய கருந்துளை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இவற்றின் ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால் இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளி வரமுடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டு விடும்.
இதை பூமியில் இருக்கும் எட்டு தொலைநோக்கிகளை கொண்டு படமெடுத்துள்ளது. .
இந்த இ ஹச் டி திட்டத்தின் மூலம் முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Add new comment